பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி மலேசியாவில்

பிறந்திருந்தால்... டெலிவிஷனில் பேட்டி

'எனக்கு எந்தவிதக் கொள்கையும் இல்லை; பெரிய சாதனைகளைச் செய்யவேண்டும் என்ற திட்டமும் இல்லை' என்று தெரிவித்தபோது, 'அப்படியானால், ஏன் எழுதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள்.

'உயிர் இருப்பதால் மூச்சு விடுகிறேன். எழுதத் தெரிகிறது, எழுதுகிறேன்’ என்று பதிலளித்தேன்.

தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு இங்கே இருப்பதைவிடப்பல மடங்கு செல்வாக்கு அங்கே இருக்கிறது. இளைஞர்களிடம் தி. மு. க. சிந்தனையைத் தவிர பெரும்பாலும் வேறு சிந்தனை இல்லை.

கருணாநிதி மட்டும் மலேசிய நாட்டில் பிறந்திருந் தால் அந்த நாட்டுப் பிரதமராகவே ஆகியிருப்பார். அந்த அளவுக்கு இளைஞர்களிடம் அவர் செல்வாக்குப் பெற்றிருக்கிறார்.

அங்கே நல்ல தமிழார்வம் இருக்கிறது. ஜலசந்தி: என்பதை நீர் இணை’ என்று மொழிமாற்றம் செய்திருக் கிறார்கள்.

சிறுகதை, கவிதை, நாவல் அதிகம் எழுதுகிறார்கள். எழுத்துத் துறையில் பெண்கள் அதிகமாக ஈடுபடு. கிறார்கள்.