பக்கம்:விபூதி விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

விபூதி விளக்கம்

16

________________

16 விபூதி விளக்கம். அநேகம்பேர் இந்தியாவென்றால் இடுகுறிப் பெயராக நினைத் துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பெயர்க் காரணம் மறைந்துபோகவே இந்தியாவென் னும் பெயர் இத்தமிழ்நாட்டிற்கு நிலைத்துவிட்டது என அறி கிறோம். தமிழர்களும் "இந்து" என்னும் பதத்தின் சரித்திரம் தெரி யாமல் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்தியாவில் வசிப்பதால் இந்துக்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்தியாவென்று எப்படி வந்தது என்றால் இடுகுறிப்பெயர் என்கிறார்கள். தமிழில் எல்லாப் பெயர்களும் காரணப்பெயர்களே (Vide மொழிநூல் by ம-m-m-ஸ்ரீ. கார்த்திகேய முதலியார்) ஆனால், தொல்காப்பியர் "மொழிப்பெயர்க் கிளவி விழிப்பத் தோன்றா" என்று கூறிப்போந்தார். நன்னூலார், "இடுகுறி காரணப்பெயர்ப்பொதுச் சிறப்பின" எனப் பிறழ்ந்து, காலத்தை நோக்கியும், ஆரிய விலக்கணத்தை ஒட்டியும் கூறினார். ஆகையால், காரணப்பெயர்கள் காரணம் மறைந்துவிட்டால் இடுகுறிகளாக ஆவதும் உண்டு எனத் தெரிகிறது. ஆகையால், தமிழர்கள் இந்துக்களும் அல்ல, ஆரியர்களும் அல்ல: தமிழர் தமிழர்களே. இவ்வைம்பத்தாறு தேசமும் இந்து தேசம் அல்ல; 56 தேசங்களே. R ஜாதிவரலாறு. ஆரியர் வருவதற்கு முன்னமே இத்தமிழ் நாட்டில் 18 ஜாதிக ளும், 18 உபஜாதிகளும் தமிழர்களுக்குள் இருந்தனவென் றும், இப்போதும் இருக்கின்றனவென்றும் ஏற்படுகிறது. "டன் ளுப்பறை 18 ஜாதி" "பதினெண் குடிமக்கள்" என்னும் பழ மொழிகளே சான்று பகரும்.