பக்கம்:விபூதி விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

விபூதி விளக்கம்

17

________________

புறவுரை 17 ஆரியர் வருவதற்கு முன்னமே தமிழ்நாட்டில் தமிழ்வேத ஆகமங்களும், கலைஞாளங்களும், கோவில்களும் இருந்தனவெ னத் தெரிகிறது. ஆரியர்கள் வருவதற்கு முன்னமே தமிழர்கள் நாகரீகத்தி லும் அறிவிலும் சகல கலைகளிலும் மேம்பட்டு இருந்ததாகவும் ஏற்படுகிறது. ஆரியர்கள் இத்தமிழ் நாட்டிற்கு முதல்முதல் வந்தபோது அவர்களுக்குள் ஜாதிபேதம் கிடையாது, நாகரீகம் கிடையாது. அவர்கள் பேசும் ஆரியபாஷைக்கு எழுத்துக்கள் கிடையாது. இப்போது அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் வேதாகமப் பிரி வினைகளும் கிடையாது. யாதொன்றும் இல்லாதவர்களாயிருந்தார் கள். அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபிற்பாடுதான் ஆரியாவர்த் தத்தை ஏற்படுத்திக்கொண்டு தமிழர் நாகரீகங்களை மெள்ள மெள் ளக் கற்றுக்கொண்டார்கள். தமிழின் பிரிவாகிய பஞ்சதிராவிடத்தில் ஒன்றாகிய மகாராட் டிர பாஷையை கோக்கித் தங்கள் பாஷைக்கு எழுத்து எற்படுத் திக்கொண்டார்கள். அதுதான் தேவநகரம். நாற் ஜாதிபேதங் கள் பிற்பாடுதான் ஏற்படுத்திக் கொண்டார்கள். இருக்காதி நால்வேதங்களை எழுதிக்கொண்டார்கள். பின்னால், தென்னாடு சேர்ந்து தமிழர்களுடன் அதிக உறவா டிக் கலந்தபோது தமிழ் எழுத்துக்களை அநுசரித்துத் தங்கள் பாஷைக்குக் கிரந்த எழுத்துக்களை அமைத்துக் கொண்டார்கள். தமிழ் நூற்களை யெல்லாம் தங்கள் பாஷையில் கிரந்த எழுத் துக்களால் எழுதிக்கொண்டார்கள். ஆகையால், பிராமண, க்ஷத்திரிய, வைசியச் சூத்திரர் என் பன ஆரிய ஜாதிவகுப்புக்கள். தமிழர்கள் வேறு, மேற்சொன்ன நான்கு ஜாதிகளும் வேறு. மகம்மதியர்களுள்ளும் ஷேக்,சையத், சுன்னத், பட்டான்ஸ் என்னும் நான்கு பெரிய ஜாதிகள் உண்டு.