பக்கம்:விபூதி விளக்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

விபூதி விளக்கம்

18

________________

18 விபூதி விளக்கம். அது போ கிறிஸ்தவர்களுள்ளும் கீரிக்சர்ச், ரோமன் காத்தளிக், பிரா டெஸ்டன்ட் என்னும் மூன்று பெரிய பிரிவுகளுண்டு. லவே, தமிழர்களுள்ளும், 18 பெரிய ஜாதிகளும், 18 உபஜாதிக ளும் உண்டு. தமிழர் வேறு, ஆரியர் வேறு. ஆரிய நான்கு ஜாதிப்பிரிவு கள் தமிழர்களுக்கு ஒவ்வாது. தமிழர் 36 ஜாதிப்பிரிவுகள் ஆரி யர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒவ்வாது. குமரிகண்டத்தில் (இலங்கையில்) (i.c, Continent of Lemuria) இருந்த நூல்கள் எல்லாம் பிரளயங்களில் கடலுக்கிரையாயின. பிற்பட்டுத் தமிழ் நாட்டரசர்கள் சேகரித்து வை வைத்திருந்த நூல்க ளெல்லாம் வியாசர்காலத்திலும், வைதுல்லியன் காலத்திலும், சம ணர் காலத்திலும், மகம்மதியர் காலத்திலும் நெருப்புக் கிரையா யின. மேற் சொன்ன இரண்டு காரணங்களினாலும் இறவாமல் எஞ்சி நின்ற அநேக நூல்கள் செல்லுக்கிரையாயின.(White ants) ஆகையால், தமிழ்நால்கள் எல்லாம் ஒன்றும் அகப்படாமல் போகவே ஆரியராசாங்கத்துக்குப் பின்னிட்ட வித்தவான்கள் எல் லாம் வியாசர் கட்டுப்பாடு செய்து எழுதிய நூல்களையே ஆதார மாக எண்ணி, தமிழர்களை எல்லாம் ஆரியர்கள் என்று சரித்திரம் தெரியாததால் கூறிப்போனார்கள். ஆரியர்கள் தமிழர்களிடத்தி னின்றும் தங்களுக்கு வேண்டியது எவ்வளவோ அவ்வளவு வரை க்கு மாத்திரம் தெரிந்து கொண்டு தங்களுடைய இனத்துக்குத் தக்கவாறு எழுதிவைத்துக் கொண்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாச ங்களையே தமிழ் வித்வான்கள் உண்மையான முதனூல்கள் என்று நம்பித்தாங்கள் அவைகளை அநுசரித்தும் பிறரை அநுசரிக்கும் படி ஏற்பாடு செய்தும்போனார்கள். ஆகையால், தமிழ் வித்துவான்கள் எல்லாம் தமிழர்களையும் ஆரியர்கள் என்றும், தமிழர்களும் ஆரிய நான்கு ஜாதிகளுக்குள் சேர்ந்தவர்கள் என்றும், சரித்திரம் தெரியாததால் விதியில்லாமல் ஒப்புக்கொண்டார்கள். அதன்படியே அநேக நூல்களும் எழுதி