பக்கம்:விபூதி விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

விபூதி விளக்கம்

20

________________

20 விபூதி விளக்கம். ஞானிகள் என்றும்; சீனதேசத்தார் தங்களினம் அல்லாதவர்களை நரகர்களென்றும்; கிரீக்ஸ் தங்களினம் அல்லாதவர்களை எரிடிக்ஸ் என்றும்; ஆரியர்கள் தங்களினம் அல்லாதவர்களை சூத்திரர்கள் என்றும்; தமிழர்கள் தங்களினம் அல்லாதவர்களை மிலேச்சர்க ளென்றும் வழங்கிவருவது இயற்கை. ஆகையினாலே, ஆரியர்கள் தமிழர்களைச் சூத்திரர் என்றால் சூத்திரர்க ளாகமாட்டார்கள். ஆரியர் அல்லாதவர் என்று அர்த்த மாகுமே யொழிய வேறன்று. ஆகையால், தமிழ்ப் பிரிவினைகள் வேறு. ஆரிய நான்குஜா திப் பிரிவினைகள் வேறு. ஆகையால், தமிழர்கள் தாங்கள் ஆரிய நான்கு ஜாதிகளுக்குள் சேர்ந்தவர் அல்லர் எனக் கண்டிப்பாய்க் கூறலாம். புறவுரை முற்றும்