பக்கம்:விபூதி விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

விபூதி விளக்கம்

23

________________

விபூதி விளக்கம். 23 னத்தால் எடுத்து, புதிய வஸ்திரத்தினால் வடிகட்டி, புதியகடத் தில் நிறைத்து, (2) காயத்திரி மந்திரம் உச்சரித்து, பரிசுத்தமான இடத்தில் வைத்து, நறுமலர்சாத்தி, சுத்த வஸ்திரத்தினால் வாய் கட்டி உபயோகப்படுத்துவதாம். யாம். (2) ஓமகுண்டத்திலிடாது உலர்த்தி விளைவித்தலும் விதி அங்கற்பம். வனத்தில் உலர்ந்தமயத்தைச் சித்திரை மாதத்தில் கொண்டு வந்து, பொடித்து, அகில் கோசலம் பெய்து முன் கூறிய விதிப் படிவிளைவித்தலாம். உடகற்பம். இயல்பாக அக்கினியினாலே தகிக்கப்பட்ட வனத்திலுள்ள பொடியில் ஆனைந்துபெய்து, முற்கூறிய விதிப்படி. அக்கினியிலி ட்டு எடுத்தலாம். இது காறும் சைவ விபூதியின் உற்பத்தி கூறினாம். இனி சைவ விபூதியின் உற்பத்தி கூறுவாம். அசை வது. அசைவ வீபூதி. (1) திருக்கோயில் மடைப்பிள்ளியில் தோன்றுவது. (2) திருவடியார் மடாலயத்தின் மடைப்பள்ளியில் உண்டா (3) வனத்தில் வெந்து உபகற்ப முறைப்படி செய்யாதது. மூன்றாம் அத்தியாயம். விபூதியின் குணம். மேலே கூறிய எழுவகை விபூதிகளில் ஒவ்வொன்றிலும் ஐவகை (5 வகை) விபூதிகள் உண்டு என்று முன்னமே கழறி னோம். அவைகளில்:- (1) கருநிறம் அல்லது நீலநிறத்தை உடைய விபூதியைத் தரித்தால் நோயை உண்டாக்கும். காயத்திரி - சிவகாயத்திரி.