பக்கம்:விபூதி விளக்கம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

விபூதி விளக்கம்

29

________________

விபூதி விளக்கம். 29 பொன்னாலாவது, வெள்ளியினாலாவது, தாமிரத்திலாவது சம்புடங்கள் செய்து அதில் வைத்துக்கொண்டு தரிப்பதும் உண்டு. இதுதவிச, பித்தளை முதலிய சம்புடங்களில் வைத்துக்கொண்டு தரிப்ப தும் உண்டு. அதான்றியும். வில்வக்குடுக்கை, சுரக்குடுக்கைகளிலும் வைத்துக்கொண்டு தரிப்பதும் உண்டு. N.B. குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைக் கவிழ்க்கலாகாது. விபூதியிடும் இடங்களும் அளவும். சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 தானங்களாம். இவைகளுள் விலாப்புறம் இரண்டையும் நீக்கி காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங்கள் கொள்வதும் உண்டு. நெற்றியில் ஆறு அங்குலமும் (அதாவது இரண்டு கடைப் புருவ எல்லைவரை ) மார்பிலும், புயங்களிலும் அவ்வாறங்குலமும், மற்றைத் தானங்களில் ஒவ்வோர் அங்குலமும் தரித்தல் வேண்டும். இவ்வளவுகளில் கூடினும் குறையினும் குற்றமாம். விபூதி தரிக்கும் காலங்கள். சந்தியாகாலம் நான்கிலும், சூரியோதயத்திலும், சூரியாஸ்த மனத்திலும், ஸ்நானம் செய்தவுடனும் பூசைக்கு முன்னும் பின் னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனம் செய்து, சௌசம்பண்ணி ஆசமித்த பின்னும், தீக்கையில்லாதவர் தீண் டியபோதும்,பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டியபோதும், நாய், கோழி, கழுதை, சண்டாளன் இவர்களைப் பார்த்தபோதும்,