பக்கம்:விபூதி விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

விபூதி விளக்கம்

30

________________

30 விபூதி விளக்கம். இரவில் கெட்ட கனவுகாணில் விழித்து எழுத்தவுடனும், அவசிய மாகத் தரித்தல்வேண்டும். விபூதிவாங்கும் முறைமை. ஆசாரியராயினும், சிவனடியாராயினும், விபூதிதந்தால் மூன் அதரமாயினும், ஐந்துதரமாயினும், நமஸ்கரித்து எழுந்து கும் பிட்டு இரண்டுகைகளையும் சீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு முன்போல மீட்டுப் நமஸ்கரித்தல் வேண்டும். விபூதிகொண்டுவந்தவர் தீக்கை முதலியவற்றினால் தம்மின் உயர்ந்தவராயின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல்வேண் டும்; அப்படிப்பட்டவர் அல்லராயின் அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து, நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும். விபூதியை யார் யார் எவ்விதம் எப்போது தரித்தல்வேண்டும். தீக்கையுடையவர்கள் சந்தியாகால நான்கிலும் சலத்தில் குழைத்துத் தரிக்கலாம். மற்றைக் காலங்களில் சும்மா தரித்தல் வேண்டும். தீக்கையில்லாதவர் மத்தியானத்துக்குப்பின் சலத்தில் குழை யாமலே தரித்தல்வேண்டும், பத்தியானத்துக்கு முன் சலத்தில் குழைத்துத் தரிக்கலாம். ஆறாம் அத்தியாயம். வியூதியின்பெயர்க் காரணமும் வடிவும். நீறு, விபூதி, சாரம், பசிதம், காப்பு என்னும் பல திவ்ய நாமங்களையுடையது விபூதி. பஸ்மம் = பசுமம் = நீறு:- ஒருபொருட் கிளவிகள். இரக்ஷை = காப்பு - ஒருபொருட் கிளவிகள்.