பக்கம்:விபூதி விளக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

விபூதி விளக்கம்

32

________________

32 விபூதி விளக்கம். பஸ்மஸ்னத்தை இடைவைத்ததின் நோக்கம் என்னவெனில், கன்மமாபைகள் நீங்கிய பின்மலம் பரிபாகமாகி, அதற்கேற்ப சந்திபோதம் விளைந்து அதுகாறும் மலத்தைப் பாகப்படுத்திநின்ற திரோதாயி சக்தி செயலற்று நீங்க அருட்சத்தியாகிய பராசத்தி இராவிருளின் செறிவை யொழித்து எழும் ஆதித்தப் பிரகாசம் போல ஆணவமல் இருளை நீக்கிப் பிரகாசிக்குமாகலின், அந்நிலை தரும் பராசத்தியின் மூழ்குதலாகிய பஸ்மஸ்நானம் ஆண்டுவேண் டப்படுவது என்பது பற்றியேயாம். பராசத்திப் பிரகாசத்தில் ஆன்மா முழுகிக் கலந்தாலன்றி ஆணவ இருள் பிறிதொன்றானும் நீங்கமாட்டாமையின் ஆணவ மல நீக்கத்துக்கு விபூதி ஸநானம் இன்றியமையாது வேண்டப்படு வதொன்றாம். இவ்வருட்பேற்றிற்கு அருகரல்லார் விபூகிஸ்தானம் இன்றி யும் சந்திசெய்வர். அவரையெல்லாம் பற்றி இங்கு கூறுவான் புகுந்தாம் அல்லேம். சைவர்க்காயின் விபூதிஸ்நானம் இன்றிச் சந்தியாவந்தனமே முடியமாட்டாது. இனி, விபூதிஸ்நானம் பராசத்தி விளக்கத்தின் பின்பே சிவ வடிவம் வாய்க்குமாகலின் சகளீகரணம் அதன்பின்பு வைக்கப் பட்டது. இவ்வமைவானும் விபூதி பராசக்தி வடிவமென்பது பெறப் பட்டது காண்சு, விபூதி வீளக்கம் முற்றும்.