பக்கம்:விபூதி விளக்கம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

விபூதி விளக்கம்

3

________________

சைவர்காள்! உ கணபதி துணை. பதிப்புரை. இச்சிறு புத்தசத்தின்கண் பொதிந்துள்ள விடயங்கள் பல அரிய பெரிய நூல்களினின்றும், "பலவகைப்படு தானமுந் தருமமும் பண்புங் குலவொ ழுக்கமு ஞானமுங் கருணையுங் குழைவு மிலகு பத்தியும் நீதியும் பொறுமையு மென்னு நலப யிர்த்தொகை விளைவபல் கொங்குநன் னாடு." என்று பெரியோர்களால் புகழப்பெற்ற கொங்கு நாட்டில், சமயாசாரியராகிய ஸ்ரீசுந்தரமூர்த்தி காயனாரால் பாடப்பெற்ற திருத்துடிசையம் பதியின்கண் அவதரித்தவரும், சைவசித்தாந்த கருத்துக்களையும், தமிழ்நாட்டின் சரிதங்களையும் அதிநுட்ப மாக ஆராய்ந்து தெளிந்தவரும், சீலம், பொறை,அடக்கமாதிய ற்குணங்கள் நிறைந்தவரும், தேவார திருவாசக முதலிய பன் னிரு திருமுறைகளையும் பண்ணோடு எங்களுக்கு ஒதுவித்தவரும் ஆகிய ஸ்ரீலஸ்ரீ துடிசைகிழார் அ சிதம்பரனார் என்பவரால் திரட் டப்பட்டவை. அவைகளை எல்லாரும் தெரிந்து ஆனந்திக்க வேணும் என்று கருத்துக்கொண்டு யாங்கள் அவரைப் பல் காலும் வேண்ட அவர் கருணை மீக்கூர்ந்து கொடுத்த விடயங்களை பலருக்கும் உபயோக மாகும்பொருட்டு வெளிப்படுத்தினாம். சைவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்புத்தகம் இன்றியமையாதது. விபூதியைப்பற்றிய வரலாற்றினை இப்புத்தகம் செவ்வனே விளக்கு வது. பலகாள் பல நூற்களிலும் துருவித் தெரிந்துகொள்ளக் கூடிய சங்கதிகளை இப்புத்தகத்தை ஒருதடவை வாசிப்பதால் தெரிந்துகொள்ளலாம். ஆகையால் சைவர்களா யிருப்பவர் ஒவ் வொருவரும் இப்புத்தகத்தை வாங்கி எம்மை மகிழ்விக்கவும் இன் னும் அநேக நூல்களை இந்தமாதிரியில் வெளிப்படுத்துமாறு எமமை ஊக்குவிக்கவும் வேண்டுகின்றோம். இப்படிக்கு உத்திரமேரூர். சைவசித்தாந்த சபையார்.