பக்கம்:விபூதி விளக்கம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

விபூதி விளக்கம்

5

________________

உ கணபதி துணை. உரிமையுரை. R சைவசமய ஒழுக்கம் இது எனப் பலதடவைகளில் எ எனக்குப் புத்திமதிகளைப் புகட்டினவரும்; என்னிளம்பருவத்துக் கல்வியை யும், ஒழுக்கத்தையும், இடைவிடாமல் கவனித்துத் தன் தேக சிரமத்தையும் தான் வருந்திச் சம்பாதித்த பொருளையும் பொருட் படுத்தாது என் அறிவு அபிவிருத்தி ஒன்றையே நாடினவரும்; தேவார திருவாசகங்கள் முதலிய பன்னிரு திருமுறைகளையும், திருப்புகழையும் பண்ணோடு கல்லும் உருகப்பாடும் ஆற்றலு டையவரும்; எனக்குச் சித்தாந்த நுணுக்கங்களைத் தமது அருட் ருக்கோடு குழைத்து ஊட்டினவரும்; திருத்துடிசையம்பதி யின்கண் தன் இளம்பருவத்து யாரோ ஒருவன் கொடுத்த நஞ் சைத் தெரியாமல் அயின் ர, தன்குல முதற்கடவுளான ஸ்ரீரஞ் சுண்டீஸ்வரர் கிருபையால் யாதொரு மருந்தும் இல்லாமலே பிழைத்து, தெய்வந் தொழுவார்க்குச் சேதமதில்லை என்னும் உண்மையை வெளிப்படுத்தினவராகிய என் பிதா ஸ்ரீலஸ்ரீ அர்த் தனாரீஸ்வர முதலியாருடைய தவத்தினால் அவதரித்தவருமான, ஸ்ரீலஸ்ரீ.அ. நஞ்சப்ப முதலியார் என்னும் என் அருமை பெருமை வாய்ந்த சகோதரர் சென்ற விரோதிகிருதுu தைமீல் உயிர்துறந்தபோது, அவர் அடி யேன்மீது பாராட்டிய அருட்பாங்கை நினைந்து நினைந்து கனிந்து உருகுதற்கு ஓர் அறிகுறியாக இப்புத்தகம் அடியேனால் வகுக்கப் படுகின்றது. துடிசைகிழார் அ. சிதம்பரனார்.