பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

 வணக்கம், நண்பனே. உன் குரலைக் கேட்டதும். 'உன்னைக் காண ஓடோடி வந்தேன் என்றது குள்ள நரி.

"உன் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி,” என்றது குருவி.

ஆனால் அதைக் கேட்காதது போல் பாவனை செய்தது குள்ள நரி.

நீ என்ன கூறுகிறாய்? எனக்குக் கேட்கவே இல்லை. இங்கே வா. கீழே இறங்கி வா. உன்னோடு பேச எனக்கு ஆசை. நீயோ மரத்திலிருந்து பேசுகின்றாய் நீ பேசுவது என் காதில் விழவே இல்லை என்றது குள்ளநரி.

ஐயே, தரைக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைப் போன்ற பறவைகள் தரைக்கு வருவது ஆபத்தானது என்றது குருவி.

எனக்கா நீ பயப்படுகிறாய்? என்று வியப்புடன் கேட்டது குள்ளநரி.

உன்னிடம் பயம் இல்லை, ஆனால் இதர மிருகங்கள் உள்ளனவே என்றது குருவி.