பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கூடைப்பந்தாட்டம் தோன்றிக் குழந்தைப் பருவத்தில் தவழ்ந்திருந்த நாளில், கூட்டமெல்லாம் அங்கேயே குழுமிக் கிடந்த வேளை. இங்கே நம் மோர்கன் புதிய படைப்பின் முயற்சியிலே, மனதைப் புதைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவருடைய இதய வானிலே மின்னலாக ஒரு எண்ணக் இறல். செர்மனியிலே (Germany) உள்ள ஃபாஸ்டு பால்’ (Faust ball) என்னும் பெயரோடு விளங்கிய விளையாட்டின் வழிமுறைகளையொத்த விளையாட்டு ஒன்று, அமெரிக்காவிலே ஆடப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களால் ஆடப்படும் அந்த ஆட்டத்தின் பெயர் மிண்டன் (Minton). நினைவுச் சுழலிலே நடமாடியவராக அந்த ஆட்டத்தின் அடிப்படை நோக்கத்தை, மோர்கன் ஒருநாள் ஆராயத் தொடங்கினர்.

முறுக்கிய கம்பளி நூலால் பின்னப்பட்ட நூல் பந்தும் (yarn ball), 55& 35,3,17171, u/sit of LDL-691-535th sRackets) ஏழடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த வலையும் (Net), மிண்டன் ஆட்டத்தில் பயன்பட்ட முக்கியபொருள்களாகும். இருபக்கமும் ஆட்டக்காரர்கள் இருந்து கொண்டு, வலைக் கு. மேலேயே பந்தானது அங்கும் இங்கும் போய் வருமாறு மட்டைகளால் அடித்துவிளையாடுவதே ஆட்டத்தின் முக்கிய நோக்கம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மோர்கனின் எண்ணம், ஒரு புதுநிலையைக் காண விழைந்தது. மட்டையும் பந்தும்கொண்டு எத்தனையோ ஆட்டங்கள் உண்டு என்பதை அறிந்தார். அதல்ை மட்டையை அகற்றிவிட விழைந்தார் மட்டையை நீக்கி விட்டால் மட்டைக்குப் பதிலாக மனிதர்களுடைய கைகளே போதும் என்ற முடிவுக்கு வந்தார். மட்டையும் மறைந்தது. கைகளுக்கு உழைப்பும். அதனுல் சிறப்பும் எழுந்தது.

சிறிய நூல்பந்தைக் கைகளால்தட்டி வருவது இனிமை, யாகவும் இயல்பாகவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு,