பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 107

ஆடுத் தவித்தார். குழப்பத்தைத் தீர்த்து வைத்து கடைப் பந்தாட்டத்தில் உள்ள பந்து கைகொடுத்து உதவியது. கனத்திலும் அளவிலும் பெரியதான கூடைப் பந்தைக் கைகளால் மேலே தட்டி ஆடும் பொழுது, கைகளுக்குத் துன்பம் விளைந்தது. இந்த இன்ப வேதனையைத் தடுக்க, பந்தின் மேல் உறையை (Cover) நீக்கிவிட்டு, காற்று அடைத்த தோல்பையை (Bladder) மட்டும் எடுத்துக் டு காண்டார். பந்தினைப் பற்றிய கவலை தீர்ந்தது.

பந்தை ஆடுவதற்கு வலை வேண்டுமே? அதற்கு டென்னிஸ் பந்தாட்டத்தில் (Tennis) பயன்படும் வலே ஒன்றை தேடிக்கொண்டார். வேண்டிய பொருள்களெல் லாம் விரும்பியவாறே வந்து கிடைத்தன. வேதனை நிறைந்த மனதின. சோதனை பரிசோதித்துக் கொண்டது. திரு. மோர்கனின் சாதனை, வெற்றி மிகுந்த சாதனையை ஏற்படுத்தி, அவரைப் புகழின் சிகரத்திற்கே உயர்த்தியது.

வெற்றி பெற்ற சோதனையிலும் சிறிது மாற்றம் செய்ய நேர்ந்தது. காற்றடைத்த தோல் பை கனமற்றதாக இருந்த காரணத்தால், கைகளுக்கு அடிக்க எளிதாகவும், தள்ளி விளையாடுவதற்கு இனிமையாகவும் இருந்தது. கூடைப் பந்தாட்டத்தில் பந்தைத் தலைக்கு மேலே உள்ள வளையத் தில் எறிய வேண்டும். கைப் பந்தாட்டத்தில், வலைக்கு மேலே பந்தை இங்குமங்கும் தள்ளிக் கொண்டிருக்சு

வேண்டும்.

ஆட்டம் புதியதாக அமைந்ததாலும் ஆடுவ தற்கு இனிமையானதாக இருந்ததாலும், தேவைப் பட்ட ஒன்று, சிறப்பான முறையில் கிடைத்து விட்டது என்பதாலும், உடற் பயிற்சி உள்ளுறைக் கூடத்து அங்கத் தினர்கள், அதிக உற்சாகத்துடன் ஆடினர். காற்றடித்த தோல் பை, வலைக்கு மேலே பறப்பதும், ஆடுவோர் இதை அடிப்பதும், மற்றவர்கள் இந்த வேடிக்கையைக் கண்டு