பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆல்ை, இது எந்த நாட்டில் ஆடப்பட்டது, எப்படி ஆடப்பட்டது, எத்தகைய வளர்ச்சியுடன் இருந்து வந்தது. என்றெல்லாம், நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. வரலாற்றாசிரியர்களின் வாட்டமிலா உழைப்பின் காரண மாக, ஆங்கங்கே ஒரு சில குறிப்புக்கள் உண்மையை தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கின்றன.

அவ்வாறு கூறப்பட்டிருக்கும் ஒரு சில குறிப்புக்களை நாம் ஆராயும் பொழுது, உதைத்தாடும் பழக்கத்தினுல். உலகமக்கள் உற்சாகமானதொரு உவப்பான சூழ்நிலையில் உலவியிருந்தனர், உரிய அனுபவங்களை வாழ்க்கைக்கு வேண்டிய முறையிலே பெற்று உய்ந்தனர் என்பதை யெல்லாம் அறிய முடிகின்றது.

அத்தகைய அரிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் சிலவற்றை இனிமேல் இங்கே காண்போம்.

பழங்காலத்தில் இது போன்ற ஒரு ஆட்டம் இருந்தது; அதில் பங்கு பெற்ற ஆட்டக்காரர்கள் அத்தனை பேரும் கணுக்கால் வரை உயர்ந்துள்ள ஒரு வகைக் காலணியை (Boot) அணிந்திருந்தனர்; அந்தக் காலணியில் நீண்ட ஆணிகள் பொருத்தப்பட்டு வெளிநோக்கி வந்திருந்தன; அவர்கள் ஆடிய ஆடுகளத்தின் அளவு 200 கெசம் நீளமுள்ள தாக இருந்தது; இரண்டு உயர்ந்த கம்பங்களில் இணைக்கப் பட்ட குறுக்குக் குச்சியின் வடிவே அதன் இலக்காக (Goal) இருந்தது’ என்று ஒரு சரித்திர ஆசிரியர் விரித்துரைகின்றார்.

ஆளுல் அந்த இடம் எது என்று சரியாக புலனுகாத காரணத்தால், இதன் தோற்றத்தின் காலமும் தெளிவற்ற தாகவே இருக்கிறது.

உலகப் பெருங்கவிஞன் ஃகோமர் (Homer) எழுதியுள்ள ஆருவது புத்தகமான ஒடிசி (Odyssey) என்ற நூலில், கால்