பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 109.

சாதாரணத் தோல் பை சரியான பந்தாகவே அவர்களுக்குத் தோன்றவில்லை. இந்தக் குறை நீக்கப் _ால்தான் ஆட்டமும் முழு அளவில் நிறைவாகும் என்ற தங்கள் கருத்தையும் கூறி விட்டனர். ஆகவே தோல் பையை Q5 முழு உருவமுள்ள பந்தாகவே மாற்றி அமைக்க இவண்டும் என்ற முடிவுக்கு மோர்கனும்வந்து விட்டார். அவரின் நினைவுக்கு விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனி ஒன்று முன்னே வந்து நின்றது.

அமெரிக்காவில் ஏ.ஜி.ஸ்பேல்டிங்’சகோதரர்கள் கூட்டுக் gap’ (A. G. Spalding and Brothers Sports Company) என்பது, விளையாட்டுப் பொருட்களைச் சிறந்த முறையில் தயாரித் த் தருவதில் திறமை மிக்கதாக விளங்கியது. கைப் பந்தாட்டத்திற்கான சோதனைப் பந்து (Trial Ball) ஒன்றைத் தயாரித்துத் தருமாறு மோர்கன் அவர்களைக் கேட்டுக் கொண்டார். இதில் ஒரு வியப்புமிகு செய்தி என்னவெனில், முதன் முதலாகத் தோன்றிய சோதனைப் பந்தின் அளவு தான், இன்று பெரிய அளவிலே முன்னேற்றம் ஆட்டத்திலே நிகழ்ந்தும், இன்னும் மாற்ற மடையாத நிலையிலே இருக்கிறது என்பதாகும்.

கைப் பந்தாட்டம் ஆடப் படுவதைப் பொது மக்கள் கண்டனர். சில நேரங்களில் அவர்கள் ஆட்டத்தை விரும்பிக் கண்டு களித்தாலும், மற்ற நேரங்களில், இதைப் பற்றிய அக்கறையும் ஆர்வமும் அற்றவர்களாகவே இருந்து வந்தனர். பார்வையாளர்களும், பாராட்டுவாரும் குறைந்து வருவதைக் கண்டு, பங்கு பெற்ற ஆட்டக்காரர் களிடையேயும் உற்சாகம் குன்ற ஆரம்பித்தது. உள்ளுறைக் கூடத்தின் அங்கத்தினர்களும், மற்றவர்களும் தாங்கள் முன்பு ஆடி வந்தக் கூடைப்பந்தும்’ ‘கையுறைப் பந்தும்’ (Hand ball) [orous soonosov 2.09 poor (Gloves)