பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 |2 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.

பெருகத் தொடங்கியது. முக்கிய நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள்’, ‘ஆணையர்கள்’, இன்னும் நல்ல மனம் படைத்தவர்கள் எல்லாரும் பெருவாரியாகப் புதிய

ஆடுகளங்களை ஏற்படுத்தித் தந்து ஊக்குவித்தனர்.

1896ஆம் ஆண்டு ஸ்பிரிங் பீல்டு கல்லூரியிலே உடற் கல்வி நெறியாளர்களின் கூட்டம் நடை பெற்றது. அங்கு கோலியோக்’கிலுள்ள மோர்கனுடைய உடற்பயிற்சிக் கூடத்தின் அங்கத்தினர்கள் இந்த ஆட்டத்தை, இரு குழுவாகப் பிரிந்து ஆடிக் காட்டினர். விளையாட்டின் இயல்பைக் கண்ட நெறியாளர்கள்’, விரும்பிப் போற்றித் தங்கள் மனமார்ந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் இதன் வளர்ச்சிக்குத் தருவதாக வாக்களித்தனர்.

இந்த நிகழ்ச்சியே பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆட்டம் நுழைவதற்கு வாய்ப்பாய் அமைந்தது. மாணவர்கள் கொண்ட உற்சாகத்தைக் கண்டு மக்களெல் லாம் ஆடத் தொடங்கினர். மக்கள் என்றால் மங்கையர் விதி விலக்கோ! அல்ல! அல்ல! அவர்களும் ஆடத் தொடங்கினர். ஆட்டத்தின் வளர்ச்சியில் சூடு பிடித்தது.

‘சரி நிகர் சமானமாக வாழ்ந்திடுவோம்’ என்று மேடை ஏறிப் புரட்சி செய்யும் பெண்கள், ‘ஆண்களுக்கு சளேத்த வர்கள் அல்ல நாங்கள்’ என்று சவால் விடுக்கும் அளவுக்கு ஆட்டத்தில் ஈடுபாடு காட்டினர். ஆலுைம் ஆட்டத்தில் ‘பால் வேறுபாடு’ (Sex Difference) தலை காட்டவேயில்லை, பெண்களுக்கிடையே குழுவாகப் பிரிந்து விளையாடினர். இன்னும் சில இடங்களில் பெண்களும் ஆண்களுமாக இருவரும் (Mixed) கலந்து, ஆடி மகிழ்ந்தனர்.

அமைதி நிறைந்த சூழ்நிலையில் மட்டும் ஆட்டம் இன்பந் தரவில்லை, அவல ஒலியைக் கிளப்பி, சவக் டெங்காகப்

பூமியை மாற்றும் போர்க்களங்களிலே கூடக் கைப்