பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 113.

பந்தாட்டம் உலவியது. போர் வெறியை, மரண ஒலியை மாற்றி, இன்பமளிக்கும் இசைபோல, வீரர்களுக்கிடையே அமைதியை உண்டுபண்ணியிருக்கிறது என்பதற்கு எத்தனையோ, ஆதாரங்கள். அவைகளிலே சான்றுக்கு

ஒன்று.

‘இரண்டாவது உலகப் பெரும் போர் நடந்து, இந்த உலகத்தைக் கலக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த வேளை: அதில் ஈடுபட்டுத் தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து, சமர் புரிந்த போர் வீரர்கள் தங்களுடைய ஒய்வு நேரத்தை பயன்படுத்த எத்தனையோ வழிகள் இருந்தும், அதையெல் லாம் தள்ளி விட்டு, எப்படியோ, எங்கேயோ சென்று ஒரு கைப் பந்தையும், ஒரு வலையையும் வாங்கி வந்து, ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்; கவலையை மறந்து ஆடினர்’ என்று தென் கடல் (South Sea) பகுதியிலிருந்து வந்த செய்தி ஒன்று கூறியது என சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு, சில இடங்களை வென்று, கைவசம் ஆக்கிக் கொண்ட பின்னர், ஒய்வெடுக்கும் வேளையிலும், பொழுது போக்குகின்ற நேரத்திலும் படை வீரர்கள், கைப்பந்தைத் தேடினர், சேர்ந்தும் ஆடினர், மகிழ்ந்தனர் என்று வரலாறு கூறும்பொழுது, உண்மையிலேயே கைப்பந்தாட்டம் நாட்டி னருக்கு நல்லதொரு பணியைச் செய்தது என்று தான் கூறவேண்டும். அந்த உயர்ந்த பணியை இன்றும் செய்கிறது. இனியும் செய்யும் என்று எண்ணி எண்ணி நாம் மகிழலாம். இப்படியாக ஆட்டம் துயர் கடந்தும், நிலை கடந்தும் வளர்ந்து, பெருமை பெற்றது. நாடு எங்கும் விரைவாகப்

பரவத் தெ ாடங்கியது.

மோர்கனுடைய உடற் பயிற்சி உள்ளுறைக் கூடத்தி னுள்ளேயே உலவி வந்த ஆட்டம், மற்றவர்களும் விரும்பி ஆடத் தலைப்பட்ட பின்னும், அவர்களது மேற்பார்வை யிலேயே 20 ஆண்டுகள் இருந்து வந்தது.