பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் | 19

பந்தின் கனம் 9 அவுன்சுக்கு குறையாமலும், 12 அவுன்சுக்கு மேற்படாமலும், சுற்றளவு 25'க்குக் குறை யாமலும் 27க்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். இன்றைய ஆடுகளத்தின் அளவு 9 மீட்டர் x 18மீட்டர்.

இதற்குப் பிறகு 1900ம் ஆண்டுக்கு ஒரு சில புதியவிதிகள் தோன்றின. விளையாட்டில் வெற்றிபெற 21 வெற்றிஎண்கள் எடுக்க வேண்டும். வலையின் மேல் உயரம் 7 அடியாக மாறியது. ஆடுகள எல்லையைக் காட்டும் கோடுகள் (Lines) ஆடும் இடமாகவே கருதப்பட்டது. பந்தைக் கையால் எறிதல், காலால் உதைத்தல் முதலிய வேண்டாத முறைகள் தடுக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆடு களத்தின் அளவு அகலம் 25 அடி; நீளம் 60 அடியாக விரிந்தது. வலையின் அகலம் 2 அடியிலிருந்து 3 அடியாக மாறியது. வலையின் மேலுயரம் 7 அடியிலிருந்து 7, அடியாக

உயர்ந்தது. சுற்றம் முறை” (Rotation Order) புதிதாக

அறிமுகப்படுத்தப்பட்டது,

‘இளங்கிறித்துவ சங்கத்தாரால் (Y.M.C.A.) ஏற்படுத்த பட்ட விதிகளுக்கு பின்னர், 1916ம் ஆண்டு ஒரு சில புதிய விதிகள் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப் பட்டது. அதற்குப் பின்னர் மாற்றம் அடிக்கடி நிகழ ஆரம்பித்தது.

1917ஆம் ஆண்டு வலையின் உயரம் 7 அடியிலிருந்து 8 அடியாக உயர்ந்தது. விளையாட்டில் வெற்றிபெற வேண்டிய வெற்றி எண்கள் 21லிருந்து 15ஆகக் குறைந்தது.

1928ஆம் ஆண்டில் ஒரு குழுவில் இருந்து ஆடவேண்டிய ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை 20 அல்லது 30 பேர்களில் இருந்து 9ஆக இறங்கியது. இப்பொழுது ஒருகுழுவுக்கு 6 பேர் இருந்துதான் ஆடுகிறார்கள். --