பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

விளையாடும் முறை

கைப்பந்தாட்டத்தின் முக்கிய நோக்கம் பந்தை தரையிலேவிழவிடாது, வலைக்கு மேலேயே இருக்குமாறு இரு பக்கமும் மாறி மாறித் தள்ளியும், அடித்தும், விளையாடிக்



கொண்டிருப்பதுதான். பந்து, கீழே விழுந்து விட்டால், அதை மீண்டும் விளையாடத் தகுதியுண்டாக்க, பந்தை உள்ளே எறிந்து ஆட்டத்தைத் தொடங்குதல் வேண்டும்.

ஒரு குழுவில், ஆடுவதற்கு 6 ஆட்டக்காரர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள். 6 பேர் மாற்றாட்டக்காரர்களாக இருப்பார்கள். ஆட்டக்காரர்கள் 6 பேர்களில், (வலையின் அருகில்) முன் வரிசையில் மூன்று பேரும், பின் வரிசையில் மூன்று பேரும் நிற்க வேண்டும்.

சர்வீஸ் (Service) என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் போடுதல்-வழங்குதல் என்று பொருள். அன்றைய நாளில் பந்தை அடிக்கடி ஆட்டத்தில் போட்டு ஆடமுனைந்த பொழுது, எறிந்தோ, இட்டோ, அடித்தோ தான் எதிர்க் குழுவிடம் போட்டு ஆடினர்கள். இன்றாே சர்வீஸ் போடுவ திலேயே வெற்றி எண்களைப் பெறும் அளவுக்குக் கடுமையா கவும், வேகமாகவும், எதிர்க் குழுவினரால் எடுக்க முடியாத அளவுக்கு, திறமை வளர்ந்துவிட்டது. அதல்ை, போடுதல், வழங்குதல் என்று சொல்வதைவிட, பந்தை வேகமாக