பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 127

பந்து கையினுல்தான் அடிக்கப்பட வேண்டும். வேறு எந்த விதமான மட்டைகளையோ (Bats) கோல்களையோ (Sticks) இங்குப் பயன் படுத்தக் கூடாது.

இனி விளையாடும் பொழுது ஏற்படக்கூடிய பொதுவான

# ro  இல தவறுகளைக் காண்போம்.

1. GDLITB515nistr6I 551 m)1355ir (Common Fouls)

அடித்தெறிதல் (Service) நிகழும் போது கீழே காணும் தவறுகள் நடந்தால், அடித்தெறியும் வாய்ப்பு உடனே எதிர்க்குழுவினருக்குத் தரப்படும். இவர்களும் தவறினால், அடித்தெறியும் வாய்ப்பை இழப்பர். அடித்தெறியும் வாய்ப்பு இவ்வாறு இரணடு குழுக்களுக்கு இடையே மாறி மாறி வரும்.

1. வலைக்குக் கீழே பந்து போகுதல் (under the net);

2. பந்து வலையைத் தொட்டு விடுதல் (Touching the

net);

3. வலைக்கு மேலே சென்று எதிர்க் குழுவினரின் எல்லேக்குள் விழாது, எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விழுதல்.

4. வலைக்கு இருபுறமும் கட்டியிருக்கும் வெள்ளை நாடாவிற்கு (White tape) வெளியே பந்து சென்று, பிறகு எதிர்க் குழுவினரின் பகுதியில் உள்ளே வந்து விழுதல்.

3. அடித்தெறிபவர் (Server) தன் ஆட்ட எல்லைக் கோட்டை (End line) மிதித்துக் கொண்டு நின்ற வண்ணம் பந்தைப் போடுதல்.