பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 131

3. எதிர்க் குழுவினரின் மனம் புண்படும்படிப் பேசுதல்.

4. ஆட்ட இடைவேளையில், ஒய்வு நேரத்தில் (Interval and Time-Out) ஆடுகளத் தின் எல்லையை விட்டு நடுவரின் அனுமதியின்றி வெளியே செல்வதும், மற்றவர்களுடன் பேசுவதும். இன்னும் மற்றவர் களையும் ஆடுகளத்திற்குள் அழைத்துப் பேசுதல்.

5, மூன்றாவது முறையாக வேண்டுமென்றே ஒய்வு

நேரம்’ கேட்டல்.

6. பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாமல்,

ஆடுதல்.

7. ஆட்டத்தின் நடுவிலே பிறருடைய கவனத்தை ஈர்த்து, ஆட்டத்தை கெடுப்பது போல், கத்திக் கொண்டு ஆடுதல்.

இதுபோன்ற தனி மனிதரின் தவறுகளுக்கும், பொறுப் பான ஆட்டக்காரர் தனிப்பட்ட முறையில் நடுவரால் எச்சரிக்கப்படுவார். மீண்டும் அவர் தான் செய்த தவறையே திரும்பச் செய்தால், அவருடைய குழுவுக்கு வெற்றி எண்’ குறைக்கப்படும். ‘அடித்தெறியும் வாய்ப்பும் மாற்றப் படும். இன்னும், அவரை ஆட்டத்தை விட்டே வெளியேற்றி விட, நடுவருக்கு முழு அதிகாரம உண்டு.

இவ்வாறு தவறுகளை நீக்கித் தன்மையுடன் ஆடினல் தான், ஆட்டம் சிறக்கும். ஆடுவோருக்கும் உற்சாகம் பிறக்கும். பார்வையாளர்களின் மனமும் களிக்கும்.

தவறு செய்வது இயற்கையென்றாலும், தவறு என்று தெரிந்ததைத் தவிர்த்து ஆடுவதுதான் பண்பாடு. தெரியாமல் நடக்கும் தவறைபற்றி இங்கு குறை கூறவில்லை. இயன்ற வரை தனி மனிதரின் குறைபாடுகள் தலை