பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆட்ட நிலையை மாற்றிக் கொள்ளும் அறிவும், இப்படி அடித்தால் திரும்பி வராது. அல்லது இப்படித்தான் பந்து திரும்பி வரும் என்ற யூகத்தையும் (Keen insight) அடிப்பவர் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறு பந்தை அடிக்க வேண்டும் என்ற வினவுக்கு விடையாகத் தன்னைத் தேர்ச்சி பெறச் செய்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆட்டக்காரர்களின் கடமையாகும். கைகளை மூடிக்கொண்டோ (First), விரல்களை விரித்து உள்ளங்கையினலோ (open hand), கையை விரிக்காமல் குவித்துக் கொண்டோ (cupped), அல்லது உள்ளங்கையின் அடிப்பாகத்தாலோ (Heel of the hand) பந்தை அடிக்கலாம்.

முதலில் அடிக்கக் கற்றுக் கொள்பவர்கள் உள்ளங் கையை விரித்துக் கொண்டோ அல்லது குவித்துக் கொண்டோதான் அடித்துப் பழக வேண்டும். நல்ல பயிற்சியும், எழும்பிக் குதிக்கின்ற திறமையும் பெற்றவர் களே, வலைக்கு மேலாகப் பந்தைக் கையை மடக்கிக்கொண்டு

(குத்துதல்) அடிக்க முடியும்.

பந்தின் மேல் பாகத்தில் (தலைப் பாகம்...on top) தான் அடித்து ஆடவேண்டும். பந்தை அடிக்கு முன் சரியான நேரத்தில், குதித்து எழும்பி, சரியாக பந்துடன் தொடர்பு கொள்ளும்பொழுது பந்தின் திசையை (போக்கைக்) கவனித்துத் தனக்கு முன்பாக அது இருக்கும்படி வைத்துத் தான் அடிக்க வேண்டும். ஒரு காலால் எழும்பி உயரக் குதித்தும் (One leg jump), இரண்டு கால்களால் எழும்பிக் குதித்தும் (Two leg jump), ஒடி வந்து எழும்பிக் குதித்தும் (Running jump) g|14.53, Gusrib.

வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த தற்கால ஆட்டத்தில் எதிர்க் குழுவினர் அடிப்பதைத் தடுப்பதற்காக, சுவர் போல