பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

முடிந்தால், எதிர்க்குழுவிலுள்ள திறமையற்ற ஆட்டக் காரர் பக்கமாகக் கொஞ்சம் வேகத்தோடு பந்தை அனுப்பி விட வேண்டும். இன்னும் சில நேரங்களில், பந்தை அடிக்க முடியாதவாறு வாய்ப்புக்கள் சூழ்வதுண்டு. அப்பொழுது அடிக்க முயற்சிக்காமல், இடம் பார்த்துத் தள்ளி விடவும் (Drop) செய்யலாம். ஒரு கையினலேயே பந்தை அடித்துக் கொண்டிருப்பதைத் தவிர, மறு கையிலுைம் அடிக்கப் பழகியிருப்பது மிகவும் நன்மை பயக்கும்.

ஒரு கையால் அடிக்கப் போவது போல் பாவனை காட்டி, இன்னொரு கையால் பந்தை அடித்து அனுப்பினல் எதிர்க் குழுவினர் உண்மையிலேயே திகைத்துப் போய்விடு வார்கள். இப்படி அடிக்க முடியுமா என்றால், முதலில் கடினமாகத்தான் இருக்கும். பழக்கம் வந்தால், பெருகி வரும் திறமையால், ஆட்டத்தில் ஏற்படும் இக்கட்டான காலத்தில் நன்றாக செயல்பட உதவும்.

அடிப்பவர்கள் அடிக்க முயலும்போது, பந்தின் மீதே முழுக் கவனத்தையும் செலுத்தியிருக்கக் கூடாது. அடிப்பதற்கு முன்பாக, அடுத்தக் குழுவினரின் பகுதியிலும் ஒரு கண்ணுேட்டம் விட்டு வைத்து, பந்து உயரமாகச் சென்று இறங்கும் பொழுது அதன் தலைப் பாகத்திலே, வலிதாக அடித்து முடிக்க வேண்டும். எப்பொழுதும், ஒரே திசையிலே பந்தை அடிக்காமல், பல திசையிலும் (Direction) சந்தர்ப்பம் போல அடித்தோ தள்ளியோ ஆட வேண்டும்.

  1. , 5#, Hsi (Block)

அடித்து ஆடுவது மட்டுமே ஆட்டத்தின் லட்சியமாக இருக்கக் கூடாது. எதிர்க் குழுவினர் அடித்தால், அடிப்பதை தடுக்கவும் எடுக்கவும் முதலிய வழிகளை அறிந்து கொள்வது மிக அவசியமாகும். ஆட்டத் தொடக்கக் காலத்தில்