பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

போட்டியில் தான் கையாளப்பட்டது. முதன் முதலாகக் கைக் கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் மூவர் பங்கெடுத்து கொண்டனர். மூன்று பேர் வலைக்கு மேலே கைகளை உயர்த்தித் தடுக்க முயல்வது தவருகும். ஆனல் இரண்டு பேர் தடுக்க உரிமையுண்டு. அதிலும் வலைக்கு அருகே உள்ள முன் வரிசையில் இருக்கும் ஆட்டக்காரர்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’, என்று அமெரிக்கக் கைப் பந்தாட்டக் கழகத்தினரால், அதே ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, விதியாய் அமைந்தது.

இந்த விதி அமைப்பிற்குப் பிறகு, முதல் தரக் குழு ஆட்டக்காரர்கள் எல்லாருமே, தடுக்கும் முறையை ஆட்டத்தில் பின்பற்றலாயினர். தற்பொழுது முன் வரிசையிலுள்ள மூன்று பேரும் தடுப்பதில் பங்கு பெறலாம்.

தடுப்பதில் பங்கு பெறுபவர்கள், ஒரு சில திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும். நன்றாக நின்ற நிலையிலிருந்து உயரத் தாவி, கைகளை சேர்ந்தாற் போல் விரித்து, வலைக்கு மேலே ஒரு தடுப்புச் சுவர் போல கைகளை அமைக்கின்ற திறன் வேண்டும். பந்தின் வழியையும், அது வலையைத் தாண்டும் நேரத்தையும், அடிப்பவரின் அங்க அசைவுகளால் பந்தை எந்தப் பக்கம் அடிக்கப் போகிறார் என்பதையும், அதற்கு ஏற்றவாறு கைகளை உயர்த்தி அந்தப் பக்கமாகத்

தடுக்க வேண்டும்.

Q45 boo, ‘(par(2687 oujib spor’ (Keen Anticipation) அவசியமாகும். மேலே கூறிய திறன்களைப் பழக்கத்தாலும் ஆடி ஆடிக் கொள்ளும் பயிற்சியாலுமே பெறலாம். வலிமையாக அடிக்கும் ஆட்டக்காரருக்கு மூன்று பேராக நின்று தடுக்கலாம். நடுத்தரமாக விளையாடும் ஆட்டக் காரருக்கு, இருவரோ அல்லது ஒருவரோ நின்று தடுக்கலாம். வேகம் இல்லாது அடித்து ஆடும் ஆட்டக் காரரைத் தடுக்காமலே விட்டு விட்டு, பிறகு எடுத்து