பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 157

இந்த ஆட்டம் பல நாடுகளிலும் வளர்ந்திருக்கலாம் என்றாலும், இதன் தாயகமாக அயர்லாந்தே விளங்குகிறது” என்று ஒயிட் எழுதுகிரு.ர்.

கர்லி (Curley) எனப் பெயர் பெறும் விளையாட்டு ஒன்று, மிகச் சிறந்த முறையில், அயர்லாந்து மக்களால் விரும்பி ஆடப்படுகிற ஒரு ஆட்டமாகும். குழுவுக்கு (Team) 15 பேராக நின்று, இரு குழுக்களாகப் பிரிந்திருந்து, எதிர் எதிராக விளையாடுவர். ஆடுகளம் (Play-field) GubrGG frv பந்தாட்ட இடத்தை விடவும், கால் பந்தாட்டத்திடலை விடவும், பரப்பளவில் மிகப் பெரியதாக இருக்கும்.

விளையாடும் கோல்கள் (Sticks) இன்றைய ஆட்டத்தில் பயன்படும் கோல்களை விட எல்லா விதங்களிலும் பெரியது. ஆகவும், கனம் உள்ளதாகவும் இருக்கும். இந்த ஆட்டத்தில் கோல் விதிகள்’ (Stick rules) எதுவுமே இல்லை. பந்தைக் கோலிஞலேத் தூக்கிச் செல்லலாம். தரைக்கு மேலாகவும் (in the air) பந்தை ஆடலாம். இந்த ஆட்டம் மிகுந்த அபாயத்தை அளிக்கக் கூடியதாக இருந்த போதிலும், மக்கள் எல்லோரும் விளையாட்டைப் பெரிதும் விரும்பி ஆடி வந்திருக்கின்றனர்.

இந்த விளையாட்டின் பயங்கரத் தன்மைக்கும், அதே நேரத்தில் மக்களின் விருப்பத்திற்குகந்த ஆட்டமாக இருந்தது என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. எடுத்துக் காட்டாக ஒரு நிகழ்ச்சியை இங்கு கூறில்ை இதன்

உண்மைத் தன்மை புலப்படும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னல் நடை பெற்ற ஒரு இழுவைச் சேர்ந்த 9 பேர், தங்களுடைய எதிர்க் குழுவினரைத் தோற்கடித்தது மட்டுமின்றி, அவர்களையும் (9 பேர்களையும்) கொன்று விட்டதாகக் கூறப்படுகிறது.