பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் | 67

வழங்கப்பட்டு வந்திருக்கிறது என்றும், பஞ்சாபிலிருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த ஆட்டத்தின் பல பெயர்களில் (Khiddo-Khundi) at Girl 13, 62.3%rs); என்றும், சரித்திர ஆசிரியர்கள் நம்புகின்றனர். இப்படி இருந்த விளையாட்டில் பருத்தியால் ஆன பந்தும், முறுக்கப் Ll L G5st Gyub’ (Cotton ball and Twisted Stick) Liu 133r படுத்தப்பட்டன. ஆனால் இதற்கு மேல் மற்ற விவரங்கள் எதுவும் நமக்கு சரியாகத் தெரியவில்லை.

o

ஒன்றாகக் கிடோ கன்டி

வளைகோல் பந்தாட்டம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வுக்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் உள்ள இடைக்காலத்திலே தான் வந்தது என்பர். இதற்குக் காரண கர்த்தாக்களாக அமைந்தவர்கள் இங்கிலாந்தின் சேனைத் தலைவர்களும் அவர்களது படையினருமேயாகும்.

இவர்கள் தங்களுடை தாயகத்தில் விரும்பி ஆடுகின்ற அத்தனை ஆட்டங்களையும் தாங்கள் செல்லும் வேறு நாடு களுக்கு எடுத்துச் சென்று பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுடைய ஒய்வு நேரத்தைப் பயன் தரும் நல்ல வழியிலே செலவழிக்க, அன்றுகொண்டு வந்ததன் விளைவே, இந்த விளையாட்டு, இந்திய நாட்டிலே ஒரு புதிய உற்சாகத்தையும், புனித சகாப்தத்தையும் உண்டுபண்ணி விட்டது.

1885ஆம் ஆண்டு கல்கத்தாவில் முதன் முதலாகத் தோன்றிய வளைகோல் பந்தாட்ட சங்கங்களுக்குப் (Hockey Clubs) பிறகு, நாடெங்கும் சங்கங்கள் பெருவாரியாகத் தோன்ற ஆரம்பித்தன. இந்தியாவைப் பொறுத்த மட்டிலும் கல்கத்தாவே வளைகோல் பந்தாட்டத்தின் பிறப்பிடமாகவும் அமைந்தது.