பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

கல்கத்தாவிலிருந்து அடுத்த படியாக, ஆட்டம் பம்பாய்க்குப் பரவியது. கல்கத்தாவும், பம்பாயும், (Bombay) ஆட்டத்தின் முக்கிய இடங்களாக விளங்கின.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ட்டன் கோப்பைத் தொடர் போட்டி (Beighton Cup Tournament) கல்கத்தாவிலும்; ஆகாகான் தொடர் போட்டி (Agakhan Tournament) பம்பாயிலும் தேசிய அளவில் நடத்தப்பட்டது.

இதன் விளைவாக, நாடு முழுவதிலும், இந்த ஆட்டத் திற்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் பெருகின. இந்த நிலையே இந்தியாவை நல்ல நிலைக்கு முன்னேற்ற வழி அமைத்துத் தந்தது என்றால், இது மிகையாகாது.

கல்கத்தாவிலும், பம்பாயிலும் பெருகி வந்த சங்கங் களைக் கண்ட மற்ற மாநிலத்தாரும், தங்களுடைய மாநிலங் களில் சங்கங்களைத் தோற்றுவிக்க ஆரம்பித்தனர். முக்கிய மாக, சேனைத் தலைவர்களிடையேயும், படை வீரர் களிடையேயும் கூட இந்த விளையாட்டு உணர்வு அதிகமாக

எழ ஆரம்பித்தது.

பம்பாயிலிருந்து ஆட்டம் பஞ்சாபுக்கு (Punjab) வந்து, அதிகமாகப் பரவியது. 1903ஆம் ஆண்டும் பஞ்சாப் பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்த வளைகோல் பந்தாட்டமும் ஒன்றாக சேர்க்கப்பட்டது என்றால், பஞ்சாபில் இந்த ஆட்டத்தின் வளர்ச்சியை நாம் எப்படி கணக்கிட இயலும்? அதே ஆண்டு லாகூரில் ஜிம்கான கிளப்பினரால்’ அகில இந்திய அளவிலே திறந்த வெளிப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது,

மக்களிடையே பெருகி வரும் விளையாட்டு உற்சாகத்தைக் கண்டு, ஒரு சில ஆதரவாளர்கள் (1907-1908) இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து. அகில இந்திய வளைகோல்