பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.

அயலிடம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்காக அவர் ஆடும் சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளும் ஆற்றல் வேண்டும்.

அதாவது அவருக்கும் கடைக் கோட்டிற்கும் இடையே, 2 எதிர்க் குழு ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டும். அல்லது. தன் குழுவைச் சேர்ந்த ஒருவர் பந்தை அடிப்பவராகவோ (Striker) பந்தை உள்ளே தள்ளி விடுபவராகவோ தனக்கு முன்பாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமை இல்லாதிருந்தால், அவர் கட்டாயம் அயலிடத்தில் இருந்ததாகத் தான் கருதப்படுவார். அப்படி அயலிடத்தில் இல்லாமல் தன்னைத் தடுத்துக் கொள்வதற்கு அவருக்கு நான்கு வழிகள் உண்டு. அதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது தலையாயக் கடமையாகும்.

(1) தன்னுடைய சொந்தப் பகுதியிலே (Own Half)

எப்பொழுதும் நின்று கொண்டு இருந்தால்;

(2) எதிர்க் குழுவினரின் பகுதியில் 2 காப்பாளர்களுக்கு

முன்னுல் நின்று கொண்டிருந்தால்;

(3) பந்து கூடவே ஒடில்ை;

(4) அயலிடத்தில் இருந்து கொண்டே, ஆட்டத்தில் பங்கு பெருமலும், பங்கு பெற முயற்சியாமலும் இருந்தால்;

அவர் அயலிடம் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது. இவ்வாறு முன் ட்ைடக்காரர் ‘அயலிடம் அடிக்கடி ஆகாது