பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 183.

ஆடவேண்டும். அடிக்கடி அயலிடம் வந்தால், இலக்கிற்குள் பந்தை அடிக்கின்ற வாய்ப்பை நாமே கெடுத்துக்கொண்ட வராகின்றாேம். அதுமட்டுமன்றி. நம் குழுவினருக்கும் இந்த செயல், எரிச்சலை உண்டுபண்ணும். இன்னும் ஆட்டத்தின் வேகமும் கொஞ்சம் குறைவுபடும். ஆகவே, கூடியவரை, அயலிடம் ஆகாமல், பந்துடனே ஒடி ஆடினல் இலக்கினுள் பந்தை அடிக்க வாய்ப்புக்கள் அதிகமாகும். ஆடுவதற்கும் இனிமையாக இருக்கும்.

அடிப்படைத் திறன் நுணுக்கங்கள் (Fundamental Techni: ques) உலகின் தலைசிறந்த வளைகோல் பந்தாட்டக்காரரான இந்தியர் மேஜர் தியான்சந்து (Dyanchand) கூறுகின்றார்.

வளைகோல் பந்தாட்டம்-நிறைந்த திறன் நுணுக்கங் களைக் கொண்டதொகு சிறந்த விளையாட்டாகும். சிறந்த

முறையில் விளையாட்டை ஆடுவது-அதற்குள்ளே தோன்றும் ஒரு கலையுணர்வு போன்றதாகும். மதிநுட்பமும், கூர்மையான விழிகளும். வலிய மணிக்கட்டும், வளமான