பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 187

இன்னும், இடமும் காலநேரமும், ஆட்டத்தில் பதினொரு பேரும் இருப்பதைக் கண்டால், எல்லோரும் ஒத்துழைத்து ஆட வேண்டும் என்று காட்டுவதையே குறிப் பாகக் கொண்டிருக்கிறது. இதற்குப் பெயரே (5( விளையாட்டு (Team game) என்பதுதான். எனவேதான், பாங்கருக்கு வழங்கி ஆடும் முறையானது பொதுவாக எல்லோராலும் வேண்டப்படுகிறது. விரும்பிப் பின்பற்றப் படுகிறது.

தான் நினைத்த இடத்திற்குப் பந்தை வழங்கும் நிலைக்கு வர, முதலில் பந்தைக் கட்டுப்படுத்தும் திறன்ைப் (Ball

Control) பெற வேண்டும். பந்தைக்கட்டுப் படுத்தும் பழக்கம், ஆடிப் பழகுவதால் மட்டுமே கைவரக் கூடியது ஆகும். ஆகவே, வழங்கும் முறையில் வளமை பெற முயல வேண்டும், o

பந்தைத் தடுமாற்றமில்லாது தடுத்து நிறுத்தும் தன்மை (Point), பிறகு பந்தைத் தன்னுடைய சொந்த நிலைக்குக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுதல் (Place); பின்னர் எந்தப் பக்கம் யாருக்குக் கொடுத்தால் பயன்தரும் என்று எண்ணி, பந்தைத் தள்ளி வழங்குதல் (Pass)