பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

தொடங்கியது. ஆடுவோர் எண்ணிக்கையும் குறைக்கப் பட்டது. இரு குழுவிலும் சமமான எண்ணிக்கையுள்ள ஆட்டக் காரர்களே ஆடுவதற்கு அனுமதிக்கப் பட்டனர். அந்தந்தக் குழுவில் உள்ள கடைசிக் கோடே இலக்காகக் கருதப்பட்டது.

“Gl–6r 5sv6 ou GT355/56b” (Kicking the Dane’s Head), “3576) Gol 163) us 2-65) g; 3.5@” (Kicking the Bladder) GT6%r so பெயர்களே பண்ணிரண்டாம் நூற்றாண்டு வரை இந்த ஆட்டத்திற்கு நிலவி வந்தன. பிறகு பெயரை மாற்றி “ஃபுட்பாலி (Fut Balle) என்று பெயரிட்டனர். ஆட்டத்தில், மக்களின் உள்ளம் அதிகமாக ஈடுபட்டது. பிற விளையாட்டுக்கள் தேய்பிறையாக மாற, புட்பாலி மட்டும் நாட்டில் வளர ஆரம்பித்தது.

விளையாட்டில் ஈடுபட்ட உள்ளங்கள், விற்பயிற்சியில் ஈடுபட மறுத்தன, ஊக்கம் குறையவே, விற்பயிற்சியும் குன்ற ஆரம்பித்தது. இதைக் கண்ணுற்ற இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஹென்றி (Henry II), சட்டத்தின் துணையை நாடினர். சட்டம் அவருக்கு சாதகமாகப் பிறந்தது. ஆட்டக் காரர்களின் நெஞ்சிலே சஞ்சலம் தலை து.ாக்கியது.

‘புட் பாலி ஆட்டக்காரர்கள் இனிமேல் இந்த விளையாட்டை < முனைந்தால் - கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள். ஆடுவோரை - விளையாட ஊக்குவிப்போரும், ஆடுவதற்கு விளையாட இடமளிப்போரும்

வன்மையாகத் தண்டிக்கப் படுவார்கள்’’.

இந்தச் சட்டத்தால் ஆட்டம் வளருகின்ற வாய்ப்பை இழந்தது. பதின்ைகாம் நூற்றாண்டு வரை சட்டமும் தொடர்ந்தது. ‘அமைதி குலைவதாலும், கூச்சலும் குழப்பமும் பெருகுவதாலும், கடவுள் தடுத்த கொடுமைகள்