பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

வழி சமாளித்தல் என்றுமே விரும்பத் தகுந்த ஆட்டமல்ல. நல்ல ஆட்டக்காரர்கள் இந்த முறையைப் பின் பற்றவே மாட்டார்கள். இதைத் தவிர்ப்பதே நல்லவர்க்கு அழகாகும்.

இன்னும், திறமையாக ஆட்டத்தில் சமாளிப்பதற்கு, எதிர்க்குழுவினரின் பந்தாட்டத்தைப் பற்றி முன் கூட்டியே அறிந்திருந்தால், நன்மையாக இருக்கும். அல்லது ஆட்ட நேரத்திலேயும்கூட கண்காணித்து ஆடவும், முயற்சித்தால் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

3, 5(3u 1 1 1) ] 1, j, 3, (Shooting)

பந்தைத் தடுத்து, நிறுத்தி, தள்ளி, வழங்கி ஒடி ஆடி சமாளித்து, இறுதியில் அடிக்கும் எல்லைக்குள் பந்தைக் கொண்டு சென்று, இலக்கிற்குள் பந்தைச் செலுத்தி, அதில் வெற்றி பெற முடியா விட்டால், மேற் சொன்ன திறமை களில் எல்லாம் மேம்பட்டு இருந்தும் மதிப்பில்லையல்லவா!

இவ்வளவு திறமைகளுக்கும் முத்தாய்ப்பாக, மகுடம் சூட்டுவதாக அமைவது இலக்கினுள் பந்தைக் குறியோடு அடிப்பதுதான், ஆகவேதான், குறியில் தெளிவும், செயலில் மதிநுட்பமும், விரைவாக முடிவு எடுக்கக் கூடிய மனமும், விரைந்து செயலாற்றக்கூடிய உடலும் தேவைப்படுகிறது.

இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது,

இத்திறன்கள் துணையிருந்து உதவுகின்றன, எதிர்க் குழுவினரை சமாளித்து, இலக்குக் காவலனின்

கால்களில் உள்ள மெத்தை உறைக்கும் கோலுக்கும் இடையில் சிக்காமல், இலக்குக்குள் செலுத்த நுண்ணறிவும், குறியோடு அடிப்பதில் தெளிவும். வலிமையும் மிக அதிக மாக வேண்டும்.