பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளே கோல் பந்தாட்டம் #9 H.

ஒரு நொடி நின்றாலும், யோசனை செய்ய முனைந்தாலும். பந்தை எதிர்க் குழுவினர் எடுத்துக் கொள்ள முயல்வர். அப்பொழுது இலக்கினுள் பந்தை அடிக்க முடியாமல் போய் விடும். ஆகவே, விரைந்து செயல்படுபவரால் தான், பந்தை அடித்து வெற்றி எண்ணைப் பெற முடியும். குறியோடு அடிப் பதற்கு, ஒருவரின் முனைப்பும் உழைப்பும்’ தான் உதவி செய்கின்றன.

மேலே கூறப்பட்ட திறன் நுணுக்கங்களில் செழுமை. பெற்றுத் திகழ, குறையாத பயிற்சியும், குன்றாத முயற்சியும் தேவை. பழக்கத்தால் ஏற்படும் பயிற்சியே சிறந்தது. திறன் களைப் பற்றி படிப்பதால் மட்டும் திறன்கள் வந்து விடாது. படித்தும் புரிந்து கொள்ள முடியாத திறன்கன் பழக்கத்

_ங்

இனுல் தேர்ச்சி பெற்று விடுவதும் உண்டு.

வளமான உடலையும், நலமான மனதையும் கொண்டு, ஆட்ட விதிகளை நன்கு உணர்ந்து அதன்படி முயன்முல், ஆட்டம் நமக்காகி விடும். பிறப்பிலே எல்லோரும் சிறந்த ஆட்டக்காரர்களாகத் தோன்றவில்லை. அவர்கள் எடுத்துக் கொண்ட உழைப்பால். உற்சாகத்தால், உண்மைப் பண்பு

களால் தான் சிறந்தவர்களாக மாறிஞர்களே தவிர, சோர்ந்து மூலையிலே முடங்கிக் கிடந்ததால் அல்ல! பத்தும் வளைகோலும் நம் எண்ணப்படியே சுழலும் வழியை நாமே. அமைக்கலாம்.