பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் - 195

கையாகவும் இருந்திருக்கலாம். இவ்வாறு கத்திக் கொண்டே விரட்டியவன். நெடுந்துாரம் ஓடாமல் ஒரு குறுகிய எல்லைக்குள்ளே அவனைத் தொட்டு விடுவதாகச் சொல்லியிருக்கலாம். அதே போல குறுகிய எல்லைக்குள்ளே அவன் ஒடவும், இவன் கத்திக் கொண்டே விரட்டுவதாகவும் அமைந்து

---

இரு க்கலாம்.

குறிப்பிட்ட எல்லே அமைந்த பிறகு,அவர்களின் கற்பனையும் வளர்ந்திருக்கலாம். இவ்வாறு வயல் வெளிகளிலும், காட்டு வெளிகளிலும், ஆடிய வேடிக்கை விளையாட்டானது. இரவு நேரங்களில் பலராகச் சேர்ந்து பாரி ஆட்டம் போல ஆட முயற்சித்திருக்கலாம். இப்படியாக பலப்பல விதங் களில் உருவெடுத்து இறுதியில் சடுகுடுவாக ஆட்டம் மாறியிருக்கலாம் என்பது ஆசிரியரின்

கருத்து.

ஆட்டம் உருவான முறையைப் பற்றியும் நமக்குசரியான வரலாறும் கிடையாது. ஆல்ை, சடுகுடு’ என்ற (Kutu-Kut) மராத்தியச் சொல்லுக்கு, ஒழுங்கற்ற கூட்டம்’ (Dis organised gathering) என்று பொருள் சொல்லப்படுகிறது.

ஆகவே,சடுகுடு ஆட்டத்தை ஒழுங்கு இல்லாத முறையில் எண்ணத்திற்கேற்ப, மனம் போன போக்காகவே மக்கள் விளையாடிக் கொண்டு அக்காலத்தில் இருந்து வந்தனர் என்பதுதான் அந்தச் சொல்லிலிருந்து நமக்கு புலனுகின்றது. சூழ்நிலைக்கேற்ப, தங்களின் மனேநிலைக்கேற்ப, மனநிம்மதி பெரும் பொருட்டு, கிராம மக்கள் விதிகளை அமைத்துக் கொண்டு விளையாடி வந்தனர் என்பதை அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் விதிகள் அமைத்துக் கொண்டிருந் ததிலிருந்தே நமக்கு நன்கு விளக்கிக் காட்டுவதாக அமைத் திருக்கிறது. !