பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

குறிப்பிட்ட எல்லைக்குள்ளே நின்று ஆடவிருக்கும் இரு குழுவினரும் ஒருவர் மூச்செடுத்துப் பாடி, அடுத்தக் குழுவின் பகுதிக்குள் சென்று மற்றவரைத் தொட முயற்சிப்பதும். மற்றவர்கள் பாடி வருபவரைப் பிடிக்க முயற்சிப்பதும் தான் ஆட்டத்தின் முக்கிய நோக்கம்.

தொடப்பட்டவர் அல்லது பிடிபட்டவர் ஆடுகளப் பகுதியை விட்டு வெளியேற்றப்பட்ட ஒவ்வொரு ஆட்டக் காரரின் குழுவுக்கு எதிராக, அடுத்த குழுவினருக்கு ஒவ்வொரு வெற்றி எண்ணும்’ கிடைக்கிறது. (வெற்றி

=

எண்ணை உப்பு என்றும் (Point) இன்று சொல்கிறார்கள்). ஆட்ட இறுதியில் அதிகம் வெற்றி எண் எடுத்தவர்களே

வெற்றி பெற்றவர்களாவார்கள்.

சடுகுடு ஆட்டம் பண்டைய நாட்களில் மூன்று விதமாக ஆடப்பட்டு வந்தது. அந்த மூன்று முறைகளையும் இங்கு

காண்போம்.

t in Fn ”I, G:H i (Sanjeevani on Revival games)

ஆட்ட நேரத்தில் தொடப்பட்டோ அல்லது பிடிபட்டோ ஆடுவதிலிருந்து வெளியேற்றப்பட்ட (Out) ஒரு ஆட்டக்காரர், எதிர்க் குழுவிலிருந்து ஒருவர் மேற் சொன்ன முறைப்படி வெளியேற்றப்பட்டதும், தங்களுடைய குழுவில் மீண்டும் சேர்ந்து ஆடுவதற்குரிய வாய்ப்பை அளித்து விளையாட வைக்கின்ற முறை, சஞ்சீவனி ஆட்டம்: என்று சொல்லப்படும்.

சஞ்சீவனி என்றால் உயிர் தரும் மருந்து அல்லது மூலிகை என்று பொருள்படும். ஆட்டத்தில் ஆடுகிற வாய்ப்பைவிட்டு. வெளியேற்றப்பட்ட ஒருவர், மீண்டும் தொடர்ந்து ஆடுதற்கு உள்ளே வரக்கூடிய நிலை இறந்தவர் மீண்டும் உயிர்பெற்று