பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 19

மிகுந்து பரவி வருதலாலும், இந்த விளையாட்டை ஆட விடாது நான் தடுக்கிறேன்.”. மன்னர் இரண்டாம் எட்வர்டு (Edward II) இவ்வாறு சட்டத்தைத் தீட்டிப் புதுப்பித்தார்.

காலம் மாறிக் கொண்டே வந்தது. ஆனல் கால் பந்தாட்டத்திற்கு நல்ல காலம் பிறக்கவில்லை. ‘அரியணையில் ஏறி ஆட்சி செய்தவரெல்லாம் விளையாட்டை வெறுத்தொதுக்கினுல், விளையாட்டுத் துறை வாழவா

முடியும்?’’

‘மூன்றாம் எட்வர்டு’, (Edward III) எட்டாம் ஹென்றி (Henry VIII) போன்ற மன்னர்கள் தங்கள் முன்னேர்களின் திட்டத்தையும், சட்டத்தையும் முழு மூச்சாகப் பின் பற்றி விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்க முற்பட்டனர். அவர்களின் முயற்சி வெற்றியடையு முன்னரே செத் தொழிந்தனர். பெண்ணரசி ஒருவரும் பட்டத்திற்கு வந்தார். மாட்சிமை தங்கிய ராணி எலிசபெத் அவர்கள் (Queen Elizebeth) 1779ஆம் ஆண்டு, கால் பந்தாட்டத்தை ஆடிய குற்றத்திற்காக சாண் ஒங்கெல் (John Wonkell) என்பாருக்கு ஒரு வார சிறைத் தண்டனையையும், மாதா கோயிலுக்குச் சென்று அபராதத் தொகையையும் கட்டி விட வேண்டுமென்று கட்டளையிட்டார்கள்.

இவ்வாருக, நாடாள வந்தோர்களின் நச்சுப் பிடியிலே சிக்கிச் சுழன்று, தடுமாறி, உருமாறி, 400 ஆண்டுகள் கஷ்டப்பட்டும், கால் பந்தாட்டம் மக்கள் மனதை விட்டு மறையாமல் இருந்தது. ஆனல் ஆடுகின்ற வாய்ப்பின்மை யால், தொடர்பு மட்டும் குறைந்து கொண்டே வரலாயிற்று.

பதிருைம் நூற்றாண்டு பிறந்தது. வெடி குண்டுகளும், துப்பாக்கிகளும், மிகுந்த அளவிலே போர் முனையிலே