பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுகுடு ஆட்டம் 203

பாடிச் செல்பவர் வேறு எந்தப் பாட்டுக்களையோ, வேறு பல சொற்களையோ பயன்படுத்தக்கூடாது. போட்டி ஆட்டம், விதிகளுக்குட்பட்டுத்தான் நடத்தப்படுகிறது. கபடி, கபடி என்றுதான் பாடிச் செல்ல வேண்டும்.

1. பாடுவோர் கவனிக்க (Raider)

எதிர்க் குழுவை நோக்கிப் பாடிச் செல்வோர் நடுக் கோட்டைத் தாண்டிய உடனேயே ‘கபடி கபடி என்ற

பாடிச் செல்பவர் பாடிக் கொண்டே தனது வலது காலை உயர்த்தித் தொடுதல்.

உச்சரிப்புடன், நடுவர்களுக்குக் காதில் விழுமாறு பாடிச் செல்ல வேண்டும்.

இந்த முறையில் பாட்டைத் தொடங்காமல், அடுத்தக் இழுவினரின் பகுதியில் நுழைந்து, அவர்களின் அருகாமையில் சென்று பாடத் துவங்கில்ை, அவர் நடுவரால் ஒருமுறை எச்சரிக்கப்படுவார். எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாது, ‘ன்டும் தொடர்ந்து இதே தவறைச் செய்தால், அவர்