பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.4 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆட்ட விதிகளின் ஆக்கத்திற்குப் பிறகு, ஆட்டத்திற்கு நல்லதொரு வளரும் சூழ்நிலை ஏற்பட ஏதுவாயிற்று, விறு விறுப்பும் வினயமும் கொண்ட இந்த ஆட்டம் இன்னும் விரைவாகவும், நிரைவாகவும் மாற வேண்டும் என்ற மனப் பாங்கு மக்களிடையே தோன்றலாயிற்று.

இதனுல் பாரதத்தின் பல பக்கங்களிலிருந்தும் மக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். தங்கள் திறமைக்கு இதல்ை மாசு ஏற்படுகிறது; என்று மனதில் நினையாமல், ஆட்டம் வளர வேண்டும். அதனுல் மக்கள் பயனடைய வேண்டும்’ என்ற நல்லெண்ணத்திலேயே ஊறித் கிளைத்திருந்த ஆட்ட அமைப்பு வல்லுநர்கள்’, மக்கள் கருத் துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.

இதன் விளைவாக, திருத்தப்பட்டும், தெளிவாக்கப் பட்டும் ஆட்ட விதிகள் இரண்டாவது முறையாக 1924ஆம் ஆண்டு வெளிவந்தன. இதுவரை, விரட்டித் தொடுதல்’ எனும் கோ-கோ ஆட்டம் அகில மகாராஷ்டிர சரீரிக் l apor logo L’ (Akil Maharashtra Sharearik Shikshan Mandal) என்னும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ்க் கட்டுப் பட்டு வளர்ந்து வந்திருக்கிறது. இச் சங்கத்தின் விதிகளே இதுவரை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தன. இப்பொழுது அகில இந்தியக் கோ-கோ கழகத்தின் கீழ் கோ-கோ ஆட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆட்ட நேரம் மிகக்குறைவாக இருந்தாலும். ஒட்டமும் உடல் உழைப்பும் அதிகமானதால், மிக விரைவில் களைப்பை ஏற்படுத்தியும், அதே நேரத்தில் உற்சாகத்தையும் களிப் பையும் அளிக்கவல்லதாக அமைந்திருக்கின்றது கோகோ ஆட்டம்.

சிறிய ஆடுகள எல்லைக்குள், குறைவான ஆட்டநேரத்தில் மிகு தியான இன்பம் எய்திட உதவும் இந்த ஆட்டத்திற்குத்