பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

(5)

(6)

(7)

(8)

(9)

விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஒடும் திசையிலிருந்து பின் எதிர்த் திசைக்குத் திரும்ப வேண்டுமானல், நீண்ட சதுரக் கட்டத் திற்குச் சென்றாே (Rectangle) அல்லது அந்தக் கோட்டை மிதித்தோ, அல்லது அதிலுள்ள கம்பத்தை மட்டும் தொட்டு விட்டோதான் வர வேண்டும்.

அவர் எக்காரணத்தை முன்னிட்டும் நடுக்

கோட்டை (Centre Lane) மிதிக்கவோ, தாண்டவோ கூடாது. இறுதிக் கட்டத்தில் உட்கார்ந்திருப்பவருக்கும் கம்பத்திற்கும் இட்ையில் உள்ள பகுதியில் செல்வதோ அல்லது அந்தக் கோட்டை மிதிக்கவோ கூடாது.

உட்கார்ந்திருக்கும் விரட்டுபவர்கள் தாங்கள் உட்கார்ந்திருக்கும். பொழுது, ஒடுபவர்களுக்கு எந்தவிதமாகவேனும் தொந்தரவு தரும் நிலையில் உட்கார்ந்திருந்து, அதல்ை ஒடுபவர் தொடப் பட்டால், அவர் நிச்சயம் வெளியேற்றப்பட மாட்டார்.

விரட்டுபவர் ஆடுகளத்தை விட்டு வெளியேயும் ஒடலாம். ஆனல் அங்கு ஆடுகளத்தினுள் பார்க்கப் படுகின்ற அத்தனை திசை விதிகளையும் (Direction) பின்பற்ற வேண்டும். விரட்டுபவனுடைய முகம் உள்ள பக்கமே ஒடும் திசையாகும். அவர் தன் முகத்தை தன்னுடையத் தோள் பட்டை அளவு (நேர்க்கோடு அளவு) வரை தான் திருப்பலாம். இந்த விதி நீண்ட சதுரத்தில் கவனிக்கப் படுவதில்லை.

உட்கார்ந்திருப்பவர் தன்னிடம் வந்து ‘கோ’ என்று சொல்லித் தொடுவதற்கு முன் எழுந்து