பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

தள்ளி வெற்றி எண் பெற இயலாது போய் விட்டால், மீண்டும் மிகை நேரம்’ (Extra time) பெற்று ஆட வேண்டும். மிகை நேர ஆட்டத்தின் ஆரம்பமும் ஆட்டத் தொடக்கத்தைப் போலவேதான் தொடங்க வேண்டும். நேர அளவும் இரு சமமாக பிரிக்கப்பட்டு, ஆட்டக்காரர்களை ஆடச் செய்ய வேண்டும். இதற்காகத் தனியே இடைவேளை நேரம் ஒதுக்கப்படவில்லை, ஆட்டக்காரர்கள் பகுதியை தங்களுக்குள் இலக்குப் (Half) பகுதியை மாற்றிக் கொள்ளும் நேரந்தான் தரப்படும். அவர்கள் இடம் மாற்றிக் கொண்ட உடனே, ஆட்டம் தொடங்கி வைக்கப்படும்.

சில முக்கியக் குறிப்புக்கள்

உலகின் எல்லா பாகங்களிலும், கால் பந்தாட்டம் இருந்து வருகின்றது. முக்கிய விளையாட்டுக்களிலே’ (Major games) முதலிடம் பெறுவதும் இதுவே ஆகும். இந்த ஆட்டத்தில் அதிக ஈடுபாடும் அனுபவமும் பெற வேண்டு மால்ை, நாம் ஒரு சில விதிமுறைகளை முதலில் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

ஏட்டின் மூலம் விளையாட்டைக் கற்றுத் தெளிவதைவிட ஆடி மகிழ்வதே இன்பம் பயக்கும். கால் பந்தாட்டம் ‘a-l–60ui $45frb’ (Physical action) egy til il ll_Irsyth, இதைப் பற்றிய எழுத்தறிவும் தேவைதான். ஆடி மகிழ்வ தோடு அமையாது, அபாயமின்றியும், ஆடப்பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான விதிகளை தெளிவாகக் கற்க வேண்டிய அவசியத்தை, இத்துறையில் வல்லவர்கள் அதிகமாக வற்புறுத்துவார்கள்.

‘ஆட்டம் எப்படித் தொடங்குகிறது? ஆட்ட விதிகள் யாவை? அதனுள் அடங்கிக் கிடக்கும் நுண்மை என்ன? தவறுகள் (Fouls) எப்படி ஏற்படுகின்றன? அதற்கான தண்டனைகள் Penalty) என்ன? (தவறுகளை தவிர்த்து