பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 29

ஆடுகின்ற முறைகள் என்னென்ன?’ என்பனவற்றைத் தெரிந்து கொண்டு ஆடினுல், ஆட்டம் இனிதாக அமையும்; ஆடினதற்கேற்ற நல்ல பயனும் கிடைக்கும். இதைக் காண்பவர்களுக்கும் நல்ல மனநிறைவு உண்டாகும். முதலில் விளையாட்டில் அடிக்கடி வருகின்ற சில முக்கியமான குறிப்புகளைக் காண்போம்.

(3) “[5?, ?, 6D 5” (Place kick or Kick-off)

இரு குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள். தங்களுடைய பருதியிலே (Half) தங்களுக்குரியதான இடங்களிலே நின்று கொண்டிருக்க, பந்தை உதைத்து ஆட்டத்தைத் தொடங்க இருக்கும் குழுவினர் தவிர மற்ற எதிர்க் குழுவினர், பந்திருக்கும் இடத்திலிருந்து பத்து கெசத்திற்கு அப்பால் (பந்தை உதைக்கும் நேரம் வரை) காத்துக் கொண்டிருக்க வேண்டும். விசில் ஒலி மூலம் நடுவர் குறிகாட்டிய பிறகு, ஆடுகளத்தின் மையக் கோட்டிலுள்ள நடுபாகத்தில் வைக்கப் பட்டிருக்கும் பந்தை முதன் முதலாக உதைப்பதற்குத்தான் ‘நிலை உதை’ என்று கூறப்படும்.

ஆட்டத்தின் தொடக்கத்திலும்; ஒவ்வொரு முறையும் விதியின்படி இலக்கினுள் பந்து உதைக்கப்பட்டு வெற்றி எண்ணுக மாறிய பின்னும்; முதல் பகுதி நேரம் (First half) முடிந்து இடைவேளைக்குப் பின் ஆரம்பமாகும் இரண்டாவது பகுதியின் தொடக்கத்திலும்; சந்தர்ப்ப சூழ்நிலை மாறிய GITT 6MrLorra, (Unavoidable or Exceptional Circumstances) ஆட்டம் இடையிலே நிறுத்தப்பட்டு, பின்னர் ஆரம்பிக்க இருக்கும் நிலையிலும் ஆட்டத்தைத் தொடங்க, நிலை உதை’ பயன்படுகின்றது.

நிலை உதையில் பந்தை உதைத்து. முதன் முதலில் ஆட்டத்தைத் தொடங்கும் ஆட்டக்காரர், பந்தை எதிர்க் குழுவினருக்கான பகுதியை நோக்கி ஒரு கெசதுரமாவது