பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 31

விருப்பத்துடன் செய்யப்படும் குற்றங்களுக்குத்தான் நேர்முகத் தனியுதை அளிக்கப்படுகிறது. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது குற்றம். தனியுதை யானது ஆட்டக்காரர்கள் செய்கின்ற குற்றங்களுக்காகத்

தரப்படுகின்றது.

G5i) 0:i355T (Intentional Fouls)

1. முரட்டுத்தனமாகவோ. ஊறு விளைவிக்கக்கூடிய முறையிலோ எதிர்க்குழுவினரைத் தாக்குதல் (Charging).

2. எதிர்க்குழுவினரை வலிய முறையில், ஊறு நேரும்படி உதைத்தலும்; உதைக்க முயலுதலும் (Kicking).

3. எதிர்க் குழுவினரைக் கட்டிப் பிடித்தல், இழுத்தல் (Holding).

4. அடித்தலும், அடிக்க முயலுதலும் (Striking).

5. கைகளாலும், உடலாலும் எதிர்க் குழுவினரை வேகமாகத் தள்ளுதல் (Pushing).

6. T&w (3)L/l Gl@36) (Tripping).

7. ஆளின் மேல் விழுதல், ஏறிக் குதித்தல்.

8. கையால் (வேண்டுமென்றே) பந்தைத் தடுத்து நிறுத்துதல், தூக்குதல், அடித்தல், தள்ளுதல்.

9. எதிர்க் குழுவினர் பந்தை ஆடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை நேர் நின்று தாக்காது, பின்னலிருந்து வந்து அவர்களை மோதுவதும் தாக்குவதுமாகிய இத்தகைய ஒன்பது குற்றங்கள், ஆடுகளத்தினுள் எங்கு நிகழ்ந்தாலும் நேர்முகத் தனியுதையே தண்டனையாகத் தரப்படுகிறது.