பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

(2.) (p&T 2-6); (Corner Kick)

கடைக்கோட்டிற்கு வெளியே பந்து போவதற்குக் காரணமாகத் தடுக்கும் குழுவினர்கள் (Defending Team) இருந்தால், அதற்குத் தண்டனையாக எதிர்க் குழுவினர், முனை உதை'யை வாய்ப்பாகப் பெறுகின்றனர்.

பந்து எந்தப் பக்கமாக கடைக் கோட்டைக் கடந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கத்திலுள்ள பக்கக் கோடும் (Side line) கடைக் கோடும் (Goal line) சேருகின்ற முனையிலிருக்கும் கால் வட்டப் பரப்பில் இருந்து தான் ‘முனை உதை’ எடுக்கப்பட்டு ஆட்டம் தொடங்கப்

படுகிறது.

இதனால் இலக்கிற்குள் நேராகப் பந்தைச் செலுத்தி வெற்றி எண் பெற முடியும்.

முனை உதையை உதைத்தவரே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆடக் கூடாது. மற்றவர்

எவரேனும் ஆடிய பிறகே, பந்தை இவர் உதைத்து ஆடலாம்.

(2si) o si Garp (Throw-in) v^

பக்கக் கோட்டிற்கு வெளியே பந்தை அனுப்பிய குழுவினருக்கு எதிராக, எதிர்க் குழுவினரில் ஒருவர், பக்கக் கோட்டிற்கு வெளியே நின்று, பந்தை உள்ளே எறிந்து, ஆட்டத்தைத் தொடங்குவதற்கே உள்ளெறிதல்’ என்று பெயர்.

உள்ளெறியும் ஆட்டக்காரர், இரண்டு கைகளாலும் பந்தைப் பிடித்துத் தலைக்கு மேல் உயர்த்தி, கால்களின் ஒரு பகுதி பக்கக் கோட்டைத் தொட்டுக் கொண்டோ