பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

(SI) ou 15Lib (off Side)

ஒரு ஆட்டக்காரர், எதிர்க் குழுவினரின் இலக்குக் கு அருகாமையில் பந்திற்கு முன்பாக நின்று கொண்டு, தன் குழுவுக்கு சாதகமான நிலையில் ஆட முயற்சிப்பதையே ‘அயலிடம்’ என்கிருேம்.

ஒரு ஆட்டக்காரர் எதிர்க் குழுவினரின் பகுதியில், தன் குழுவினரால் பந்து ஆடப்படும் நேரத்தில், பந்திற்கு முன்னே, அடுத்தவர் இலக்குக்கு அருகிலே நின்று கொண்டிருந்தால், அவர் அயலிடத்தில் நிற்கிறார்’ என்று கருதப் படுவார்.

இவ்வாறு ஏற்படும் அயலிடத் தவறிலிருந்து தப்பி விளையாட நான்கு வழிகளே உண்டு. அவற்றை கடைப் பிடித்தால், ஆட்டத்தில் வெற்றி பெற நிறைய வாய்ப்புக்கள் ஏற்படும்.

1. தன்னுடைய சொந்தப் பகுதியில் (Own Half) நிற்கும் பொழுது அயலிடம் ஆவதே இல்லை.

2. தான் நிற்கும் இடத்திற்கு முன்னதாக, எதிர்க் குழுவினரில் இருவர் யாராவது இலக்கிற்கு அருகாமையில் நின்றிருந்தாலும்;

3. தன்னல் பந்து ஆடப்படும் நிலையிலும், தான் அயலிடத்தில் இருந்த போது எதிர்க் குழுவினரின் மேல் பந்து பட்டு தன்னிடத்தில் வந்தாலும்;

4. குறியுதை, முனையுதை, உள்ளெறிதல் இன்னும், நடுவரால் கீழே எறிந்து விடப்படும் பந்தைத் தானே நேராக எடுத்தாடிலுைம், அவர் நிற்கும் நிலை சரிதான்.

அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப் பட மாட்டார்.