பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

11. அதிக வெற்றி எண்கள் (Goals) பெறுகின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: இந்த சமநிலை நீக்குமுறை வழியை முடிவாட்ட (par spust (Knock-out competition) Gurt l 5 sir 5 #Gli பொழுதுதான் பின்பற்ற வேண்டும்.

அடிப்படைத் திறன் நுணுக்கங்கள்

(Fundamental Techniues)

கால்களுக்கும் பந்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால்தான், இந்த விளையாட்டைக் கால்பந்தாட்டம் என்கிருேம். சிறந்த ஆட்டக்காரர்கள் என்ற பெருமையைப் பெற்றவர்கள் யாவரும் கால்களினல் பந்தை நன்றாகக் கட்டுப்படுத்தி (Proper control), நினைத்த இடத்திற்கு நெறியோடு அனுப்பி (Good passing) ஆட முடிவதால்தான் அவர்களின் ஆட்டம் காண்பதற்குக் கவர்ச்சிகரமாக

அமைகிறது.

கால்களுக்கும் பந்துக்கும் வேண்டிய அதிக தொடர்பு சியாலுமே வருவதாகும். இதற்கு

பழக்கத்தாலும் பயிற்

தெளிவான

வலிவான உடல் மட்டும் இருந்தால் போதாது. அறிவும், திறன் நுணுக்கங்களும் (Skills) இருந்தால்தான் திருந்திய முறையிலே தேர்ச்சியுடன் ஆட்டத்தை ஆட முடியும். ஆகவே அதற்கு வழிகாட்டும் சில முக்கியமான திறன் நுணுக்கங்களைக் கீழே காண்போம்.

(2) to $603, 2 on Bj, Bo (Kicking the ball)

காலால் பந்தை வேகமாக உதைக்க வேண்டியதே கால் பந்தாட்டத்தில் உள்ள திறமைகளில் முதன்மையானதாகும். இடது காலாலும் வலது காலாலும் மாறி மாறிப் பந்தை உதைக்கும் திறன் வந்தாலொழிய, இந்த ஆட்டத்தில்

சிறந்து விளங்க முடியாது.