பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 47

பந்தை அடித்தால்தான் பெருமை வரும் என்பதல்ல. அந்த வாய்ப்பை வழங்குவோருக்கும் புகழ் அதிகமாகவே

உண்டு.

பந்தை முன்புறமாகவே தன் குழுவினருக்குத் தள்ளி வழங்குதலும்; கொஞ்சம் முன்னுக்குத் தள்ளி விட்டு, குழுவினரை ஒடிச் சென்று எடுக்கச் செய்தலும், ன்னும் பின்னும் சந்தர்ப்பம் அறிந்து எதிராளிகளுக்கு எட்டாது வழங்குவதும் சமயமறிந்து தருதலும் நல்ல வழங்கும் தன்மைக்குச் சான்றாகும். அந்த ஆட்டத்தில் அவர் பெற்றிருக்கும் சிறந்த அனுபவத்தையும் அது குறிப்ப தாகும்.

(ஈ) ஏமாற்றுதல் அல்லது சமாளித்தல் (Tacking)

எதிர்க் குழுவினரின் கட்டுக்குள் அடங்கிய பந்தை, தங்கள் உடைமையாக்கி விளையாட, அவர்களைத் (விதிகளுக் குட்பட்டு) தளளியும், தாக்கியும் (Gentle attack), இடையில் கால்விட்டு லாவகமான முறையில் பந்தை அடைதலும்; அவ்வாறு பந்தைப் பெற முடியாத நிலையில், அவர் பந்தை நினைத்த இடத்திற்கு அனுப்ப முடியாதவாறு தடுத்து நிறுத்துவதும் தான் சமாளித்தல ஆகும்.

தன் கால்களுக்குக் கீழேயுள்ள பந்தை, எதிர்க்குழுவினர் எடுத்து ஆட முனையும் பொழுது, அவர்களிடம் பந்தைக் கொடுக்காது வெட்டிக் கொண்டு (Cut) ஒடுவதும்; முன்னும் பின்னும் பந்தைக் காலால் இழுத்து, மாற்றி அவர்களே ஏமாற்றுதலும் சமாளித்தலாகும். இதற்கு வேகமாக ஒடுவதும், உடனே நிற்பதுமான திறமையுடன் பந்தை உடனே நிறுத்துகின்ற ஆற்றலும் வேண்டும். கால்களின் முன் பகுதியான பாதங்களால் மட்டும் அல்லாது குதிகால் களாலேயும் பந்தை முன் பின்னல் இழுத்து விளையாடுகின்ற ஆற்றல் அவசியமாகப் பயில வேண்டிய ஒன்றாகும்.