இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கூடைப் பந்தாட்டம் |
தோற்றம்
உலக விளையாட்டு அரங்கிலே, உன்னதமான இடம் வகிப்பது கூடைப் பந்தாட்டமாகும். முக்கியமாக
ஆடப்படும் முதன்மை விளையாட்டுக்களிலே (Major Games) முன்னணியில் நிற்குமிந்த ஆட்டம், அமெரிக்காவின்
ஒா அரும படைபபாகும.
கலை, வாணிகம், அரசியல், விஞ்ஞானம் போன்ற பல துறைகளில் தானும் வளர்ந்து, பிற நாட்டவருக்கும் வழி காட்டுவதோடு அமையாது, விளையாட்டுக்களிலும் முன்னேடியாக இருந்து, புதியன படைத்துப் புதுமை செய்கின்ற நாடாக அமெரிக்கா, உலகிலே எந்நாளும் பீடுநடை போடுகிறது. நம்மால் புதுமை விரும்பிகள்’ என்று போற்றப்படும் அளவுக்கு முன்னேறியுள்ள அவர்கள், தங்கள் பழமையைப் புறக்கணிக்காது, புதுமையைப் போற்றி சாதனைகளை உருவாக்க விழைந்து, வெற்றி களையும் பெற்றிருக்கின்றனர். அதன் விளைவே கூடைப் பந்தாட்டத்தின் பிறப்புக்குக் கருவாக அமைந்தது.