பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அதிக வலிமையும் முயற்சியும் தேவைப்பட்டது. எனவே தலைக்கு மேல் உயர்ந்தபடி இருக்கும் வளைவினுள் (Curve) பந்தை எறிய முயன்றால், அதற்கு அதிகமான வலிமையும் சக்தியும் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

எனவே, இலக்குக்காக வளைவு’ ஒன்றை உண்டாக்கி, அதைத் தலைக்கு மேலிருக்கும் படி உயர்த்தி வைத்தேன். அதிலும் சிறிது கடின உழைப்பாலே பந்தை வளைவினுள் எறியும் முறைக்கு ஏற்ப, அமைப்பையும் உண்டாக்க முடிவு செய்தேன். தலைக்கு மேலே கைக்கெட்டும் தூரத்தில் வளைவிருந்தால், பந்தை எறிவதற்குத் தடைகள் உண்டாக லாம் என்று சிந்தித்து, கைக் கெட்டாத உயரத்தில் வளைவினை அமைத்தேன்.”

இவ்வாருக, இலக்குப் பகுதி (Goal) புதுமையான முறையில் அமைந்து விட்டது. இப்பொழுது ஆடுவதற்கு ஒரு பந்து தேவை. பல நாள் யோசனைக்குப் பின்னர், கால் பந்தையே (Foot ball) எறியும் பந்தாக அவர் வைத்துக் கொண்டார். புதுமையாக அமைந்த வளைவு (Curve) தான் இலக்கு என்றா ல், அதை அமைப்பது எவ்வாறு? என்ற வின எழும்பவே, அவருக்குக் கொஞ்சம் குழப்பம் தோன்றலாயிற்று.

இதைப் பூர்த்தி செய்ய, கட்டிட மேற் பார்வையாளர் ஒருவரிடம் மரத்தாலான பெட்டிகளைக் கேட்டிருந்தார். அவரோ அத்தகைய பெட்டி தன்னிடம் இல்லையென்று கூறி. பீச் பழங்களை வைத்துக் கொள்கின்ற கூடைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். இந்த பழக் கூடைகளே ஆட்டத்தில் (வளைவாக மாறி) பயன்பட்டது. கூடைகளே ஆட்டத்தில் முக்கிய அங்கம் வகித்ததால் ஆட்டமும் கூடைப் பந்தாட்டம்’ என்ற பெயரைப் பெற்றது.

உயரத்திலே பொருத்தப்பட்டிருந்த கூடைகளை நோக்கி எறியப்பட்ட பந்து, முதன் முதலில் பழக்கமின்மையால்