பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.

அத்தகைய அருமை மிகுந்த விளையாட்டுக்களில். அனைவரும் விரும்பி ஆடுகின்ற ஆறு முக்கியமான விளையாட் டுக்கள் பற்றிய வரலாற்றினைக் கூறி, விளையாட மேற் கொள்ளும் நுண்திறன்களை படிக்கின்ற அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் எழுதியிருக்கிறேன்.

தேவையான இடங்களில், படங்களுடன் விளக்கம் தந்திருக்கிறேன். இந்த நூலே கிரேஸ் பிரிண்டர்ஸ் மிக அருமையான முறையில் அச்சிட்டுத் தந்திருக்கின்றார்கள்.

நூல் வெளிவர திரு. R. ஆதாம் சாக்ரட்டிஸ் மேற் கொண்ட முயற்சிகளுக்கும் உதவிக்கும். என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறன்.

என்னுடைய விளையாட்டுத்துறை நூல்களை ஏற்று

ஆதரித்து உதவுகின்ற தமிழறிந்த தகைமையாளர்களி டையே மேலும் ஒரு புதிய நூலை அளிக்கிறேன்.

எப்பொழுதும் போல் ஏற்று உதவ வேண்டுகிறேன்.

அன்பன்,

ஞானமலர் இல்லம், எஸ். நவராஜ் செல்லையா

சென்னை-600 017 (நவன்)

24–1–1981